காலக் கணக்கர்
அஞ்சுவரு பொழுதினானும் என்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே
காழார்க்
கீரன் எயிற்றி, குறுந். 261 : 1 – 4
அச்சத்தைத் தரும் கூதிர்ப்பருவத்தும் என் நெஞ்சு வருந்திப் புண்பட்ட துன்பம்
காரணமாக ஊர் காப்பாளர் இரவில் துயிலாது நாழிகையை எண்ணிக்கொண்டிருப்பது போல என் கண்கள்
துயிலாவாயின.
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் (முல்லைப் 55) இருந்தனர்.
பகலில் நாழிகைக் கணக்கு - சூரிய ஒளி ; இரவில் நாழிகைக் கணக்கு - அறிந்த முறை – கருவிகள் – கணக்கிடும் முறை - கணிதம் கற்ற முறை – ஆய்க.
கன்னல் - நாழிகை வட்டில் / நாழிகை
கடல்முகந்து
கொண்ட கமஞ்சூல் மாமழை
சுடர்நிமிர்
மின்னொடு வலனேர் பிரங்கி
என்றூழ் உழந்த புன்றலை மடப்பிடி
கைமாய் நீத்தங் களிற்றொடு படீஇய
நிலனும் விசும்பும் நீரியைந் தொன்றிக்
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர்மருங் கறியா தஞ்சுவரப் பாஅய்த்
தளிமயங் கின்றே தண்குரல் எழிலி….
மதுரையாசிரியர் நல்லந்துவனார், அகம். 43
: 1 – 8
தண்ணிய முழக்கத்தைக் கொண்ட மேகங்கள் பெய்யும் கார்காலமானது, கடலின் நீரை முகந்து நிறைந்த சூலினையுடைய கரிய மேகம், ஒலிமிக்க மின்னலுடன் வலமாக எழுந்துசென்று ஒலித்து, ஞாயிற்றின்
வெம்மையால் வருந்திய புற்கென்ற தலையினையுடைய இளைய பெண் யானை, மேலே உயர்த்திய தன் கையும் மறையத்தக்க ஆழ்ந்த வெள்ளத்தில் களிற்றுடன் படிந்து
விளயாட, நிலத்தினும் வானுனும் மழைக்கால் நீர் பொருந்திச் சேர்ந்திட,
குறிய நீரையுடைய நாழிகை வட்டிலால் நாழிகை அளந்து கூறுவார் கூறலன்றி ஞாயிறு உள்ள இடம் இதுவென அறியப்படாமையின்
உலகம் அஞ்சுதலடைய, பரந்து பெய்யும் மழையொடு பொருந்தியது.
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்
காவிரிப்பூம்பட்டினத்துப்
பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், முல்லைப்.
55
நாழிகைக்
கணக்கு அளந்து அறியும் நுண்ணறிவு உடைய கணக்கர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக