தமிழர் திருமணம் –
பகுதி -2
மண நிகழ்ச்சி - 86,136
இப்பாடல், களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்று – நச். கனையிருள் அகன்றகாலை என்பதனாற் ( அந்நாளிலே மிக்க இருள் நீங்கிய அழகு பொருந்திய விடியற்காலையில், முற்பக்கம் (பூர்வபக்கம்) என்பது பெற்றாம். கோள் என்றது ஈண்டுத் தீய கோள்களை.
உரோகணி என்பதனை வருவித்து, விழுப்புகழ் நாளாவது
உரோகணி திங்களை அடைந்த நாள் என்னலுமாம் . உரோகணியும் திங்களும்
கூடிய நாள் கலியாணத்திற்குச் சிறந்ததென்பது , ‘திங்கட் சகடம் வேண்டிய
துகடீர் கூட்டத்து ……… வதுவை மண்ணிய மகளிர் (அகம்.136) எனவும், வானூர் மதியம்
சகடனைய வானத்துச் சாலியொரு மீன் தகையாளைக் கோவலன், மாமுது பார்ப்பான்
மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது” எனச் சிலம்பு. மங்கல.50-53. வருதலானும் அறியப்படும். கலியாணம் எல்லாரும் புகுதற்கு உரியதாகலின், பொது எனப்பட்டது.நெல்லொடு தயங்க என்றமையால் நெல்லும் சொரிந்தமை
பெற்றாம்.( மருதம்) வதுவை மணமாவது
– குளிப்பாட்டல்; கோடிக்கலிங்கம் – புதுப் புடைவை. –நாட்டார். மேலும்
காண்க. அகம் 136.”வென்வேல் திரையன் வேங்கட
நெடுவரை –திரையனது வேங்கடமெனும் நீண்ட மலையில்85
கூந்தலில் மணம்
நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள்
-
காவட்டனார், அகநா. 378 : 1,2
மிக்க பொருள்
தங்கும் உயர்ந்தோங்கும்
மனையகத்தே, கலியாணம் செய்த மகளிர்தம் கூந்தல்போல் மணம் பொருந்துமாறு….
மணங்கமழும் வேங்கை மரத்தின் பொன்னிறத் தாதுக்கள் காற்று அடித்தலால் உதிர….
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல் உண்கண் வேய்த்தோள் அவட்கு
குறள். 1113
வேய் போலும் தோளினை
உடைய அவளுக்கு நிறம் தளிர் நிறமாயிருக்கும், பல் முத்தமாயிருக்கும் இயல்பாய நாற்றம் நறு நாற்றமாயிருக்கும் உண்கண்கள் வேலாயிருக்கும்.
நேர்ந்து
கொள்ளுதல் – இல்லச் சடங்கு
விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாம் கைந்நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்
கொற்றன், குறுந்.218: 1-3
தலைவன் வாரா நிலையில் -
கொற்றவைக்குப் பலிக்கடன் நேர்ந்துகொள்ளுதல், காப்பு நாண் அணிதல், நிமித்தம்
பார்த்தல், விரிச்சி கேட்டல் ஆகியன செய்யோம்.
குறுந். 260- தலைவிக்கு நன்னிமித்தங்கள் விசும்பில் குருகு
உயரப் பறத்தல், புதரில் பூ மலர்தல், தோளில் வளை செறிதல்.தலைவனுக்கு இடைச்சுரத்துக்
கன்று ஈன்ற பசு குறிக்கிடுவது தீ நிமித்தம். காப்புக்கட்டுதல் இன்று கிராமக்
கோயில் சடங்கு – இன்று காசு முடிந்து போடுதல் உண்டு.இச்சடங்குகளின் வளர்ச்சி
நிலையை ஆய்க
ஐங்குறுநூறு-292, கபிலர்-சங்க இலக்கியத்தில் இப் பாடலில் மட்டுமே பின் முறை ஆக்கிய
பெரும்பொருள் வதுவை (தொல்.கற்பியல்,31) என்ற இரண்டாவது
திருமணம் குறிக்கப்பெற்றுள்ளது
.மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிர
தண்மழை தழீஇய மாமலை நாட
நின்னுஞ் சிறந்தனள் எமக்கே நீநயந்து
நல்மனை அருங்கடி அயர
.மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிர
தண்மழை தழீஇய மாமலை நாட
நின்னுஞ் சிறந்தனள் எமக்கே நீநயந்து
நல்மனை அருங்கடி அயர
எம்நலம் சிறப்பயாம் இனிப் பெற்றோளே
உரை:- மயில்கள்
ஆடவும் பெரிய தேனீக்கள் ஒலிக்கவும் குளிர்ந்த மழை மேகங்கள் மலைமுகட்டைத் தழுவிக்
கிடக்கும் பெரிய மலை நாடனே, நீ விரும்பி நம் மனையின் கண் கொணர்ந்து திருமணம்
செய்துகொண்டமையின் அந்த மணத்தால் எம் நலனும் சிறந்தன. இப்போது யாம் பெற்ற இவள்
உன்னைவிட ச் சிறப்பானவளாக எமக்கு உள்ளாள்.
சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல்லென நோவல் யானே
நக்கீரர், அகம்.369:22-26
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல்லென நோவல் யானே
நக்கீரர், அகம்.369:22-26
நீங்குதல் இல்லாத நல்ல புகழினை உடைய சோழரது உறையூர் போன்ற செல்வமுடைய நல்ல
மனையில் புதுவதாக ஒப்பனை செய்து தன் தமராவார் மணம் செய்விக்கவும் மனம் பொருந்தாதவளாகிய
என் மகள் சீரும் சிறப்பும் இல்லாது சிறிய ஊரில் வறுமையுற்ற பெண்டினது புல் வேய்ந்த
குடிசையில் ஒரு பசு கட்டியுள்ள ஒற்றைத் தூண் கொண்ட முகப்பினையுடைய இயைபில்லாத வறிய
மனையில் சிலம்பு கழித்து அவனுடன் மணம் பொருந்தினளோ என யான் வருந்துவே...
வரதட்சனை
பெருங் கடல் முழக்கிற்றாகி யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கடுங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறுமெனக் கொள்ளுநர் அல்லர்
நறுநுதல் அரிவை பாசிழை விலையே
மதுரை மருதனிள நாகனார், அகநா.90: 10-14
தலைவன் தலைவியைப் பொன் அணிந்து வரைதல் வழக்காதலின் அரிவை பாசிழை
விலை என்றாள். உறுமெனக் கொள்ளுநர் அல்லர் என்றமையால்,
பொருள் மிகக் கொடுக்கவேண்டுமெனத் தலைவியை அருமை பாராட்டியவாறு.
இவள் தந்தைமார், அரிவையாய இவளது பசிய அணிகட்கு விலையாக, வீரம் செறிந்த கோசர்கள் வாழும் புது வருவாயையுடைய
நியமம் என்னும் ஊரினைக் கொடுப்பினும் அமையும் எனக் கொள்வார் அல்லர். –நெய்தல்.
……………….. ஆய்தொடிக் குறுமகள்
நலம்சால் விழுப் பொருள் கலம்நிறை கொடுப்பினும்
பெற; அருங்குரையள் ஆயின்…….
………………………………………..
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன் கொல்லோ தானே….
அம்மூவனார், அகநா. 280 : 4 – 11
இளமகளாகிய அவள், நலம்தரும் சீரிய பொருள்களோடு அணிகலன்கள் பலவும் நிறையக் கொடுத்தாலும் பெறுதற்கு
அரியவள்………………… அவள் தந்தையுன் தொழிலாற்றியும் பணிந்தும் சார்ந்தும்
இருந்தால் அறத்தை எண்ணி அவளை நமக்குத்தருவானோ?
வ ன்கொடுமை
எரிமருள் வேங்கைக் கடவுள் காக்குங்
குருகார் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒரு முலை யறுத்த திருமாவுன்ண்ணி
மதுரை மருதனிளநாகனார் – – நற்.216
குருகுகள் ஆரவாரிக்கும் வயல்கரையிலே கடவுளேறிய எரிபோன்ற
பூவை உடைய வேங்கை மரத்திற்கட்டிய கட்டுப்பரணருகில் அயலானொருவன் செய்ததனாலாய கவலை
வருத்துதலாலே ஒரு கொங்கையை அறுத்த திருமாவுண்ணி.
ஒப்பிடு - சிலம்பு
காமம்- புணர்ச்சி
ஒழுக்கம் என்ற
சொல் பாலியல் தொடர்புடையதா? ஆய்க
குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்
புறப் படா.... முத்தொள்.83
பூங்கொம்பு போன்ற பெண்களின் காம விருப்பு குடத்து விளக்கொளி வெளியே தோன்றாததுபோல்
புறத்தே தோன்றாது.
புணர்ச்சி - காமப் பித்து
மாஎன மடலும் ஊர்ப பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும்
சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமம் காழ்க்
கொளினே
பேரெயின் முறுவலார், குறுந். 17
காம நோய்
முதிச்சியுற்றால் ஊரும் குதிரை என ஊராத
பனைமடலை ஊர்வர் ; ஒருவரும் சூடாத எருக்க மாலையை அணிந்துகொள்வர்; தெருவில் பலராலும்
பரிகசிகப்படுவர் ; காதல் - காமம் நிறைவேறாத நிலையில் சாகவும் துணிவர்.
நன்னனது காவல் மரமாகிய நறிய மாமரத்தை வெட்டி, அவனையும்
போரில் கொன்ற, வஞ்சினத்தை உடைய கோசர் செய்த சூழ்ச்சியைப் போலத் துணிவுடன்
செய்யப்படும் ஆராய்ச்சியும் சிறிதளவு வேண்டற்பாலதேயாகும். மேலும் காண்க:
குறள்.1131. அகம் 322. நற். 152, 342. கலித். 106,புறம்.106.
பித்துப் பிடித்தல் – எருக்கு மருந்தாகும். – ஆய்க
. புணர்ச்சி,காமமோ பெரிதே
சிறுகோட்டுப்
பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
-கபிலர்,
குறுந். 18 : 4, 5
காமம் என்பது உயிரில் தோன்றி வளரும் உணர்வு எனக்
குறிக்கப்பட்டது.
ஆடவர், பெண்டிர் காம உணர்வின் இயல்பு – உடலியல், உயிரியல் –
அறிவியல் ஆய்வு.
மேலும் காண்க : நற்.,335, கலித். 137.
புணர்ச்சி - கனவு
பொய்வலாளன் மெய்யுற மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட
கச்சிப்பேட்டு நன்னாகையார், குறுந்.30 : 2, 3
பொய்யை மெய்போலக் கூறுவதில் வல்லவன் என்னுடைய உடம்பின் ஊற்றின்பத்தைப்
பெறுவதற்காக, இராக் காலத்தில் பொய்யாகிய கனவில் வந்து மயக்கியதை
---
இஃது
இரவில் கண்ட கனவு – முக்காலம் உணர்த்தும். பொய்க்கனவு – பகல்கனவு . எண்ணங்களும்
கனவுகளும் ஆய்க.
களவுப்
புணர்ச்சி
மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு
பேயும் அறியா மறையமை புணர்ச்சி
பூசல் துடியில் புணர்பு பிரிந்திசைப்பக்
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்
கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல
நடுங்கஞர் தீர முயங்கி நெருநல் ….
பரணர், அகநா. 62: 5-11
சிவந்த வாய் – மார்பில் முலை – மூங்கில் தோள் – குவளைக் கண் – பேயும் அறியா க் காலத்தே – களவுப் புணர்ச்சி – அலர் எழ – களவி
நீங்க அஞ்சி – காவிரி வெள்ள நெடிஞ்சுழியில் படிந்து குளிப்பவள் போல்
– நேற்று – உள்ளம் நடுங்கும் துன்பம் போகத் தழுவி
– ஆகத்திற் பொருந்திக் கிடந்தனள். ( நீத்தத்திற்
( வெள்ளம்) குளிக்குமிடத்துக் குளிருமாறுபோலக்
குளிர முயங்கி – நாட்டார்
கைம்பெண்டிர்
சிறு வெள்ளாம்பல் அல்லியுண்ணும்
கழிகல மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே
மாறோக்கத்து
நப்பசலையார்,புறநா.280:13-15
உரை:- சிறிய வெள்ளிய ஆம்பலிடத்து உண்டாகும் அல்லி அரிசியை உண்ணும் , அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர் போல தலைவன் இறந்த வழிப் பின்னே வாழும் திறம்
நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம் – எனத் தலைவி வருந்துகிறாள்.
மகளிர் கணவனை
இழந்தபின் அவர் ஒருவராலன்றிப் பிறரால் தீண்டப்படாத தம் கூந்தலைக் கழித்துவிடுவது
பண்டையோர் மரபு. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி,அல்லியுணவின் மனைவி (புறநா.
250) எனப் பிறரும் கூறுவது காண்க. மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென்
கூந்தல் உரியவாம் நினக்கே(குறுந். (225) எனவும் குறுந்தொடி மகளிர், நாளிருங்
கூந்தற்கிழவரைப் படர்ந்து ( புறநா.113 ) எனவும் சான்றோர் கூறுவனவற்றால் மகளிர்
கூந்தலைத் தீ ந்டும் உரிமை கணவர் ஒருவற்கே உண்டென்பதும் என்வே கூந்தற்குரியர்
இறந்தவழி கூந்தலும் உடன்கழிதல் முறைமையென்பதும் பண்டையோர் கொள்கையாதல்
தெளியப்படும். மழித்த தலை மழித் தலையெனவும் வைத்த தலை வைத்தலை(பதிற்.44) எனவும்
வருதல் விகாரம். ஒளவை சு.து.உரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக