ஞாயிறு, 17 மே, 2015

னை மலையை உடைத்து வழி அமைத்தல்வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர் – மாமூலனார்,அகம். 251 :12-14 குதிரைப் படையுடைய மோரியர்கள் அழகு செய்யப்பட்ட தம் தேரினது சக்கரங்கள் தடையின்றிச் செல்லும் பொருட்டு மலைவழிகளில் உள்ள பாறைகளை உடைத்துப் பாதையாக்கினர்;

     மலையை உடைத்து வழி அமைத்தல்
விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த
அறை இறந்தகன்றனர் ஆயினும் உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனா -                                                          அகம். 69 :10-12
விண்ணை அளாவும் நீண்டுயர்ந்த பெருமலைகளில் செல்லும் தேரினையுடைய மோரியர், தங்கள் பொன்னாலியன்ற உருள் தடையின்றிச் செல்ல, வெட்டி நெறியாக்கிக் கொண்ட குன்றங்களைக் கடந்து சென்றாராயினும்…..
மாகெழுதானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர் –
                                           மாமூலனார்,அகம். 251 :12-14
குதிரைப் படையுடைய மோரியர்கள் அழகு செய்யப்பட்ட தம் தேரினது சக்கரங்கள் தடையின்றிச் செல்லும் பொருட்டு மலைவழிகளில் உள்ள பாறைகளை உடைத்துப் பாதையாக்கினர்; வெண்மையான அருவிகளைக் கொண்ட அத்தகைய பாறை வழிகள் ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக