From – kalappal.blogspot.com
சிலப்பதிகாரச் சிந்தனைகள் – பகுதி -
3
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் ...
சிலப். 20:
80
கணவனை இழந்தோர்க்கு ஈடாகக் காட்டுதற்கு யாதும் இல்லை.
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண்
சிலப்.21:
3, 4
முற்பகல் பிறனுக்குக் கேடு செய்தான் பிற்பகல் தானே
கேடுறுவான்.
உம்மை வினைவந்து உருத்த காலைச்
செம்மை இலோர்க்குச் செய்தவம் உதவாது
சிலப்.23:
171, 172
முன்செய்த வினை அதன் பயனை விளைவிக்க வந்துசேர்ந்த பொழுது
பண்பு இல்லாதார்க்குச் செய்த தவமும் உதவாது.
துறைமிசை நினது இரு
திருவடி தொடுநர்
பெறுக நன்மணம் விடு பிழை மணம் எனவே
சிலப்.
24: 17, 18
நீர்த்
துறையின் கண்ணே நின்று நினது இரு திருவடிகளையும் பற்றுக்கோடாகக் கொள்பவர்
நன்மணம்பெறுக; பிழை மணம் அவரை விட்டு விலகுக என்று அருள்வாயாக.
மன்பதை காக்கும் நன்குடிப்
பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல் ...
சிலப். 25:
103, 104
மக்களைக்
காக்கும் மன்னர் குடியிலே பிறத்தல் துன்பமே அல்லாது போற்றத்தக்கதன்று.
மண்ணாள் வேந்தே நின் வாழ் நாட்கள்
தண்ணான் பொருநை மணலினும் சிறக்க
சிலப். 28: 125, 126
மண்ணினை ஆள்கின்ற
வேந்தனே நின் வாழ் நாட்கள் குளிர்ச்சியுடைய ஆன்பொருநை ஆற்று மணலினும் மிகுதியாக
விளங்குவதாக.
செல்வம் நில்லாது என்பதை வெல்போர்த்
தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை அல்லையோ காவல் வேந்தே
சிலப்.
28: 152 – 154
காவல் வேந்தனே
! செல்வம் நில்லாது என்பதனைப் போர்க்களத்திலே வெல்லும் ஆற்றலுடைய தண்டமிழை இகழ்ந்த
ஆரிய மன்னரிடத்தே நிகழ்ந்ததை இப்போது நீயே
கண்டனையன்றோ ?
ஆடும் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழி
கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது
செய்வினை வழித்தாய் உயிர் செலும் ...
சிலப்.
28: 165 – 167
ஆடுகின்ற கூத்தரைப்போல் அருமையான உயிரானது ஓர் உடலோடேயே
என்றும் நின்று செயற்படுவதன்று; செய்த வினையின் வழிப்பட்டு உயிர்கள் வெவ்வேறு
உடலினும் சென்று பிறக்கும்.
நாளைச் செய்குவம்
அறம் எனின் இன்றே
கேள்வி நல்லுயிர்
நீங்கினும் நீங்கும்
சிலப்.
28: 179, 180
நாளைக்கு அறம்
செய்வோம் என்றாலோ இன்றே கேள்வியளவான நல்ல உயிர் நீங்கிப் போயினும் போகலாம்.
இதுஎன வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகின் முழுவதும் இல்லை
சிலப். 28: 181, 182
கடல் சூழ்ந்த இவ்வுலகில், தம் வாழ் நாளின் இறுதி நாள் இதுவே
என்று வரையறுத்துக் கூறுவார் எவரும் இலர்.
அருந்திறல் அரசர்
முறைசெயின் அல்லது
பெரும்பெயர்ப்
பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது எனப்
பண்டையோர் உரைத்த
தண்டமிழ் நல்லுரை
சிலப்.
28: 207 - 209
ஆற்றலுடைய
அரசர்கள் முறையாக ஆட்சி செய்தாலன்றிப் பெரும் புகழுடைய பெண்டிர்க்குக் கற்பு நெறி
சிறப்பாக அமையாது என்பது பண்டைய சான்றோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.
குமரியொடு வட இமயத்து
ஒரு மொழி வைத்து
உலகு ஆண்ட
சேரலாதற்கு …
சிலப். 29:
1: 1 – 3
தெற்கு எல்லையாகிய
குமரிமுனையோடு வடக்கே இமயமலை வரையும் ஒருமொழியே ( தமிழ் ) அரசு மொழியாக வைத்து இவ்வுலகினை ஆண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
ஆவான்.
தொல்லை வினையால்
துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல உயிர்கொடுத்த
கோவேந்தன் வாழியரோ
சிலப். 29:
16. 1, 2
பழவினை காரணமாகத்
துயருற்றவளின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன் உயிரைக் கொடுத்த மன்னர்
மன்னன் (பாண்டியன் ) வாழ்வானாக.
பிறந்தவர்
இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவதன்றே
தொன்றியியல் வாழ்க்கை
சிலப். 30: 139, 140
பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுமையன்று தொன்றுதொட்டு
உலகில் நடந்துவரும் வாழ்க்கை நியதியே.
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க் கொலை நீங்குமின்
சிலப்.
30: 188, 189
பொய்யுரைக்கு அஞ்சுங்கள்; புறங்கூறுதலை விட்டுவிடுங்கள்; ஊன் உணவைக் கைவிடுங்கள்; உயிர்க் கொலை செய்யாதீர்.
செய்ந்நன்றி கொல்லன்மின்
தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின்
பொருண்மொழி நீங்கன்மின்
சிலப். 30: 191, 192
செய்ந்நன்றி மறவாதீர்; தீயவரோடு நட்புக் கொள்ளாதீர்; பொய்ச் சான்று சொல்லாதீர்; அறவோர் அவையை நீக்காதிருப்பீர்.
பிறர்மனை அஞ்சுமின்
பிழையுயிர் ஓம்புமின்
சிலப்.
30: 195
பிறன்மனை நயத்தலை
அஞ்சுங்கள்; துன்புறும்
உயிர்களுக்கு உதவுங்கள்.
கள்ளும் களவும்
காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும்
விரகினில் ஒழிமின்
சிலப்.
30: 197, 198
கள்ளுண்ணலையும்
களவாடும் எண்ணத்தையும் இழிகாமத்தையும் பொய்யுரைத்தலையும் பயனில பேசும் கூட்டத்தையும் உறுதியுடன்
கைவிடுங்கள்.
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
சிலப்.
30: 199 – 201
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலைத்து நிற்பன அல்ல. சாவு வருவதோ தப்பாது அதனால் வாழும் காலத்தை வறிதே கழிக்காது இறந்தபின்
எய்தும் மறுமை உலகுக்கு உற்ற துணையாகிய அறவழியைத் தேடுங்கள்.
முற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக