பாண்டிய –
முத்து
இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவி கால்வடுத் தபுக்கும்
வெண்கண்ணனார், அகநா.130:9,10
குளிர்ந்த
ஒளியினையுடைய முத்துக்களைப் பரந்து வரும் கடல் அலைகள் கொணர்ந்து வந்து தரும்;
அமுத்துக்கள் குதிரைகளின் கால்களை வடுப்படுத்தும்.
முத்துச்சிப்பி
கரையொதுங்குமா?- ஆய்க.
இகுணை-
மருதநில மரம் நடுகல் வரிசை
மூங்கில்முத்து
............................நெடுவேய்க்
கண்விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல பழங்குழித் தாஅம்
முள்ளிப்பூதியார்,
அகநா.173 :13-15
காட்டில்
வெப்பம் நீரை உறிஞ்சியதால் வற்றிய அழகிய பெரிய நீண்ட மூங்கிலின் கணுக்கள் வெடிக்க,
கழங்கினைப் போன்ற உருவினைக் கொண்ட கழுவப்படாத முத்துக்கள் வழிச் செல்வார்
கழங்காடிய பழைய குழிகளிலே வந்து வீழும். கழங்கு = கழற்சிக் காய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக