ஆமை முட்டை
இடல்
குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி
நிறைசூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த
கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகுவாய்க்
கணவன் ஓம்பும்
கானலம்.........
குமுழிஞாழலார் நப்பசலையார், 160 ; 4-8
நிறைந்த சூல் கொண்ட யாமை,அடும்புக் கொடியினை அழியுமாறு
இழுத்து வளைந்த உப்பங்கழியிடத்து வெண்மையான மணல் மேட்டின் பக்கத்தே அதனைச்
சேர்த்து; யானைக் கொம்பினாற் செய்த வட்டுப் போன்ற வடிவுடைய புலால் மணக்கும்
முட்டையை ஈன்று, பிறவுயிர்கள் அறியாவண்ணம் அம்மணலுள் மறைத்து வைத்தது; பிளந்த
வாயினையுடைய ஆண் யாமை, அம்முட்டையினின்றும் குஞ்சு உயிர்த்தெழுந்து வெளிப்பட்டு
வரும் அளவு, அதனைக் காத்துக் கிடத்தற்கு இடமான கடற்கரைச் சோலை.
கணவன் - ஆண் யாமை –அஃறிணை
ஆண்பாற் பொருளிலும் வழங்கும் –காண்க, நற்.103, குறுந்.151.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக