வெள்ளி, 29 மே, 2015

இன்னா நாற்பது – கபிலர்

இன்னா நாற்பது – கபிலர்
 (நூற்குறிப்பு – 41 செவ்விலக்கிய நூல்கள் – கட்டுரையில் காண்க.)

பொருள் உணர்வார் இல்வழி பாட்டு உரைத்தல் இன்னா
                                                                                                  10: 1
பாட்டின் பொருளை அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் செய்யுள் இயற்றிக் கூறுதல் துன்பம் தரும்.

புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா ...
                                                                                  12: 3
புலால் உணவை விரும்பி உண்டு வாழ்தல் உயிருக்குத் துன்பம்.

உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா
                                                                                        16: 1
நுகராது பதுக்கி வைக்கும் பெரும் பொருள் துன்பம் தரும்.
ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா
                                                                                       21: 1
 கொடுத்ததைப் பெற்று மகிழாதவர்க்குக் கொடுத்தல் நன்றன்று.

துறையிருந்து ஆடை கழுவுதல் இன்னா
                                                                                     . 23: 2
நீர்த் துறையிலிருந்து ஆடை தோய்த்து மாசு போக்குதல் நன்றன்று.

கட்டு இல்லா மூதூர் உறை இன்னா
                                                                                      25: 3
சுற்றமாகிய கட்டு இல்லாத பழைய ஊரிலே வாழ்தல் துன்பமாம்.
அறிவறியா மக்கள் பெறல் இன்னா
                                                                                       . 29: 3
அறிய வேண்டுவனவற்றை அறிய மாட்டாத  பிள்ளைகளைப் பெறுதல்  துன்பமாம்.

அடைக்கலம் வவ்வுதல் இன்னா ...                                  40: 3                                                                            
அடைக்கலமாகப் பெற்றவற்றைக் கவர்ந்துகொள்வதால் துன்பமே விளையும்.

                                                           THE END

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக