புதன், 6 மே, 2015

எழுத்துடை நடுகல்


எழுத்துடை நடுகல்

மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து அவ்
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
கண் பொரி கவலய கானத்து .....
                      மதுரை மருதனிளநாகனார்,அகம்.343: 4-9
உரை: உப்பு வணிகனது வண்டியின் பொலிவில்லாத பூண் சிதையச் செய்த வலிய பாறையில் உள்ள நடுகல் வாடிய மாலையுடன் நீராட்டப் பெறாமல் இருந்ததினால்  அதில் கூரிய உளியால் இயற்றப் பெற்ற எழுத்துக்கள் மறைய,அவ்வழியிலேசெல்லும் புதியவர்க்கு வேறு பொருள் தருவனவாகப் பிறழ்ந்து காணப்படும்.இடங்கள் பொரிந்த கவர்த்த வழிகளை உடைய காடு.
எழுத்துடை நடுகல்-67
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலிசூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
                                                                நோய்பாடியார், அகநா.67:8-11
எழுத்துடை நடுகல்131
..........................................ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
                 மதுரை மருதனிள நாகனார், அகநா.131 : 9-11
நிரைமீட்ட போரில் இறந்துபட்ட கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து, மயிற்பீலி சூட்டப்பெற்று விளங்கும் சிறப்பினைக்கொண்ட நடுகல் ,,,,
சுவரில் எழுதுதல்
……………………..தோற்றிய
செய்குறி ஆழி வைகறோ றெண்ணி
எழுதுசுவர் நனைந்த அழுதுவார் மழைக்கண்
                                          பொருந்தில் இளங்கீரனார், அகநா. 351 :9 – 11
 சுழித்த  செய்குறியாய வட்டத்தை, நாள்தோறும் எண்ணி, அவை எழுதப்பட்ட சுவர், நனைதற்கு ஏதுவாய அழுதலால் கண்ணீர் பெருக..( பல்லி நிமித்தமும்)

297-எழுத்துடை நடுகல் –குயில் எழுத்து

இருங்கவின் இல்லாப் பெரும்புன் தாடி
கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர்பயம் படரத் தோன்றுகுயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்
                    மதுரை மருதன் இளநாகனார், அகநா. 297 : 5 – 10
அழகிழந்த பொலிவற்ற தாடியினையும் அஞ்சாமையையும் உடைய மறவர்கள் தம் அம்புகளை அச்சம் தரும் நடுகல்லில் தீட்டுவர்; அதனால் பக்கம் தேய்ந்து மெலிந்துபோன நடுகல்லில் பெயரும் பெருமையும் விளங்கத் தோன்றுமாறு பொறிக்கப்பட்ட எழுத்துக்களை ஒன்று சேர்த்துப் பொருள் பொருத்தமுடன் படித்துப்பார்க்க இயலாதவராய், வழி நடை வருத்தத்தால் தளர்ச்சியுடன் செல்லும் வழிப்போக்கர்கள் அதனை விடுத்து அகன்று செல்வர். ( குயில் எழுத்துபொறித்த எழுத்து, சேக்கோள் தண்ணுமை - ஏறு கோட் பறைபோர்ப் பறை ) (குறுந். 12 )
343 எழுத்துடை நடுகல்
மரங்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்றலை சிதைத்த வன்றலை நடுகற்
கண்ணி வடிய மண்ணா மருங்குற்
கூருளி குயின்ற கோடுமாய் எழுத்தவ்
வாறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
                    மதுரை மருதன் இளநாகனார், அகநா. 343 : 4 – 8
வண்டியினைக் கொண்ட உப்பு வணிகனது பெயர்ந்து செல்லும் உருளின் பொலிவில்லாத பூண், சிதியச் செய்த  வலிய பாறையிலுள்ள நடுகல்லின், இடப்பெற்ற கண்ணி வாடப்பெற்றதும் நீராட்டப் பெறாததுமாகிய இடத்தில்கூரிய உளியால் இயற்றப்பெற்ற கீற்றுக்கள் மறைந்த எழுத்துக்கள், அவ்வழியிலே செல்லும் புதியர்க்கு வேறு பொருளினவாகப் பிறழ்ந்து காண

சுவரில் எழுதுதல்
நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து
   மாமூலனார், அகநா.61:2
 தலைவர் பிரிந்த நாளைக் குறித்தௌவைத்த நீண்ட சுவரினை நோக்கிச் சென்ற நாட்களை எண்ணியுணர்ந்து,  வருந்தி ...கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக