வலமாகச் சூழ்ந்து
எழுவது என்றால் என்ன?
பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை
காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், முல்லைப். 4 - 6
அலையோசை
முழங்கும் குளிர்ந்த கடல் நீரைக் குடித்து
எழுந்த மேகம்,அகன்ற உலகத்தை வளைத்து, வலமாக உயர்ந்து எழுந்து
, மலைகளில் தங்கி
மழையைப் பொழிந்த புல்லிய மாலைக் காலம்.
திருமுருகாற்றுப்படை
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு..
.
-நக்கீரர், திருமுரு.1, 2
உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் மகிழும்படி, மேருவை வலமாக
எழுந்து, பற்பல சமயத்தவரும் புகழ்கின்ற ஞாயிறு கீழ்க் கடலிடத்தே எழக்
கண்டாற்போன்று....
.
வலஞ்சுரி
சிலம்பு அணிகொண்ட வலம்சுரி மராஅத்து
வேனில் அம்சினை கமழும்
சேரமான் எந்தை, குறுந்.22 : 3, 4
வலமாகச் சுரிந்து விளங்கும் வெண்கடம்பின் மலர்கள் வேனில்
காலத்தில் மலர்ந்து மணம் வீசும்.
மேலும் காண்க : ஐங். 348, 383. அகம். 83
வலமாகச் சுழிந்து எழுதல், மலர்தல் – வலஞ்
சுழிசிறப்பிக்கப்படுதலின் உட்கருத்து யாது ? அறிவியல் நோக்கு.- ஆய்க.
கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
சுடர்நிமிர்
மின்னொடு வலனேர் பிரங்கி
மதுரையாசிரியர் நல்லந்துவனார் அகநா. 43: 1-2
வலமாகஎழ- மழை பொழிதல்84
மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங்கு எழிலி பெளவம் வாங்கித்
தாழ்பெயல் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய ஏமுறு காலை
மதுரை
எழுத்தாளன்,அகநா.84 : 1- 5
மலைமீது வில் – மேகம் முழங்க – கடல் நீரை முகந்து - உலகினை வலனாக எழுந்து- இறங்கிப் பெய்யும் மிக்க
மழை – திசையெல்லாம் மறையப் பொழிந்து நிலம் அழகுற இன்பம் எய்திய இக்காலத்தே.
வலன் ஏர்பு - மேகநீர்முகந்து –மழை,குதிரைமரம்
குணகடல்
முகந்த கொள்ளை வானம்
பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்
தோல்நிரைத் தனைய ஆகி வலன் ஏர்பு
-
கபிலர் , அகநா. 278: 1 – 3
கீழ்த்திசைக் கடலிடத்து நீரைமுகந்து – சுமந்து – யானகள் அணிவகுத்து நின்றது போல்
தோன்றி வலமாக எழுந்து சென்றன.
குதிரைமரம் – ஆற்றில் நீரைத் தேக்குதற்குக் கால்களாய் நிறுத்தப்படும் மரம்.
வலம் திரி மருப்பு (298) பனிக்கட்டி + நுங்குச்சுளை
................................ மடப்பிணை
வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதியச்
இடைகாடனார், அகநா. 304 : 8 – 10
இளைய பெண்மான், வலமாகத் திரிந்த கொம்பினையுடைய தலைமையுடைய
கலைமானொடு, அசையும் கிளையினையுடைய குருந்த மரத்தின் பொருந்திய நிழலில்
தங்கியிருக்க.
ஞாயிறு –பெருமை –வலமாக எழுதல் – ஏன் ?
பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர்பு விளங்கி
மல்குகடல் தோன்றியாங்கு .....................
மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், அகநா. 298: 1 – 3
உலகில் வாழும் உயிர்களுக்குப் பயன்மிக்க செல்வத்தைத் தரும்
பலகதிர்களையுடைய ஞாயிறானது, அவ்வுயிர்கள் விளங்குதற்கு ஏதுவாகிய பல்வகை
தொழில்களைத் தருமாறு , வலமாக எழுந்து, நீர்முக்க கடலிலே தோன்றினாற்போல. ‘ வழையமல் அடுக்கத்து வலனேர்பு....
’
........அகநா. 328 : 1
பூமியின் வடமண்டலத்தில் சுழற்சி இடமாக இருக்க - தென் மண்டலத்தில் சுழற்சி வலமாக மேலெழும் என்பது அறிவியல் உண்மை - மேலும் ஆய்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக