செவ்வாய், 12 மே, 2015

கோசர் வரலாறு

கோசர் வரலாறு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல்மொழி போல
                              ஒளவையார், குறுந். 15 : 2, 3
கோசர் – மோகூர்ப் பழையனுடைய அவையத்து விளங்கிய ஒருவகை வீரர். நாலூர்க் கோசர், வாய்மொழிக் கோசர், ஒன்றுமொழிக் கோசர் – பாராட்டப்படுகின்றனர்.தம் குலப் பெண்ணைக் கொன்றமைக்காக, நன்னனைக் கொன்ற சூழ்ச்சித் திறம் உடையவர்.
மேலும் காண்க : குறுந்.73. அகம் 205, 251.
73 – கோசர் வரலாறு
…. ............................. நன்னன்
நறுமா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வண்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே
                                        பரணர், குறுந். 73 : 2 – 5
kōcar,
n.
An ancient caste of warriors;
பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார். மெய்ம் மலி பெரும்பூட் செம்மற் கோசர் (அகநா.15).
இலக்கியங்களில் புகழ்ந்துபேசப்படும் நன்னன்- கோசர் வரலாற்றை ஒப்பிட்டு ஆராய்தல் வேண்டும். மேலும் காண்க : குறுந். 292, அகநா. 205.

கோசர்கள்
நன்று அல் காலையும் நட்பில் கோடார்
சென்ற வழிப்படூஉம் திரிபுஇல் சூழ்ச்சியின்
புன் தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
மாவீசு வண்மகிழ் அஃதை போற்றி
காப்புக் கைந்நிறுத்த பல்வேல் கோசர் 
                                                -கல்லாடனார்,அகம்.113:1-5)
உரை: நண்பர்கள் ஆக்கம் இழந்து கேடுற்றபோது அவர்பால்கொண்ட நட்பில்  ஒருபொழுதும் மாறுபாடு கொள்ளாதவராய் அவர்க்குத் தாமே வலியசென்று  உதவும்  பிறழாத கோட்பாடு உடையவர்கள் கோசர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக