வியாழன், 21 மே, 2015

41 - செவ்விலக்கிய நூல்கள்---பத்துப்பாட்டு



41 -  செவ்விலக்கிய நூல்கள்
கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலானவை
ஓர் அறிமுகம்
  தொல்காப்பியம்- எட்டுத்தொகை – பத்துப்பாட்டு – பதினெண்கீழ்க்கணக்கு – சிலப்பதிகாரம் – மணிமேகலை – முத்தொள்ளாயிரம் – இறையனார் களவியல்.


பத்துப்பாட்டு


திருமுருகாற்றுப்படை

          பத்துப்பாட்டுள் முதலாவதாக இடம்பெற்றுள்ள திருமுருகாற்றுப்படை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரால் இயற்றப்பட்டதுஇது புலவராற்றுப்படை, முருகு என்றும் அழைக்கப்படுகிறது.  317 அடிகளைக் கொண்ட இது பாட்டுடைத்தலைவன் பெயரோடு இணைத்து வழங்கப்படுகிறதுதிருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய ஊர்களில் அமைந்துள்ள திருமுருகனின் பெருமைகளை ஆறு பகுதிகளாக இந்நூல் சிறப்பித்துக் கூறுகிறது.  இந்நூல் புறப்பொருள் பற்றியது.

இந்நூல் 1834ஆம் ஆண்டு சரவணப் பெருமாளையரால் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பெற்றதுநச்சினார்க்கினியர் பரிமேலழகர் முதலிய அறுவர் இதற்கு உரை எழுதியுள்ளனர்.


பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுள் இரண்டாவதாக அமைவது பொருநராற்றுப்படைஇது கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடிய பாடல் இது.  இந்நூல் வஞ்சியடிகள் இடையிடையே வரத் தொடுத்த ஆசிரியப்பாவால் ஆனது.  248 அடிகளைக் கொண்டதுபாணர்களுள் ஒரு பிரிவினரான பொருநரை ஆற்றுப்படுத்தியதால் பொருநராற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.  கரிகாற் பெருவளத்தானுடைய வெண்ணிப்பறந்தலை வெற்றியைச் சிறப்பித்துப் பாடுகிறது.   இது புறஞ்சார்ந்த நூலாகும்.

இந்நூல் 1889ஆம் ஆண்டு .வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்றதுநச்சினார்க்கினியர் இதற்கு உரை செய்துள்ளார்.

சிறுபாணாற்றுப்படை

          ஓய்மா நாட்டு நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் சிறுபாணன் ஒருவன், வழியில் வறுமையில் வாடும் பாணன் ஒருவனை அவ்வள்ளலிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்த நூல் சிறுபாணாற்றுப்படைபத்துப்பாட்டுள் மூன்றாவது. இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இதன் ஆசிரியர்கடையெழு வள்ளல்களைப் பற்றிய வரலாறு இதில் இடம் பெற்றுள்ளது.

          இந்நூலில், இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ எனவரும் செய்தியால் சிறிய யாழை ஏந்தியிருந்த பாணன் சிறுபாணன் என்று அழைக்கப்பெற்றான்சிறுபாணனை ஆற்றுப்படுத்தியதால்  இந்நூல்  சிறுபாணாற்றுப்படை   ஆயிற்று.  இது புறப்பொருள் பற்றியது.


 269 அடிகளால் ஆன இந்நூலை 1889ஆம் ஆண்டு . வே. சாமிநாதையர் பதிப்பித்தார்இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் உரைசெய்துள்ளார்.

பெரும்பாணாற்றுப்படை

          பத்துப்பாட்டுள் நான்காவதாக இடம்பெற்றுள்ள பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையனைச் சிறப்பித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதாகும்இது 500 அடிகளைக் கொண்டதுஇது புறஞ்சார்ந்த நூலாகும்.
         
இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி எனவரும் குறிப்பால் பெரிய யாழை ஏந்தியுள்ள பாணன் பெரும்பாணன் எனப்பட்டான்பெரும்பாணனைப் பரிசில் பெற ஆற்றுப்படுத்தியதால் இது பெரும்பாணாற்றுப்படை ஆயிற்றுஅன்றைய தொண்டை நாட்டு வளத்தையும் மக்கள் வாழ்க்கை முறையையும் அறியப் பெரிதும் துணை நிற்பது இந்நூல்.

இந்நூலை .வே. சாமிநாதையர் 1889ஆம் ஆண்டு பதிப்பித்தார்இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.
         
முல்லைப்பாட்டு

          முல்லைப்பாட்டு அகப்பாடலாகும்நான்கு ஆற்றுப்படைகளுக்குப் பின் பத்துப்பாட்டு என்னும் தொகைப் பெயரில் காணப்படும் பாட்டு என்னும் சொல்லைத் தன் பெயரில் கொண்டுள்ள நூல் இதுகாவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார் இயற்றிய இந்நூல் 103 அடிகளால் ஆனதுமுல்லைத்திணை ஒழுக்கத்தை அழகாகவும் எளிமையாகவும் விளக்குவதுடன் அதன் புறமாகிய வஞ்சித்திணை இயைபுகளையும் நன்கு வெளிப்படுத்துகிறது. பாட்டுடைத் தலைவனின் இயற்பெயரைச் சுட்டிக் கூறாததால்          இஃது அகப்பொருள் இலக்கியமாகக் கருதப்படுகிறது

          1889ஆம் ஆண்டு .வே. சாமிநாதையர் இந்நூலைப் பதிப்பித்துள்ளார்இதற்கு நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.


மதுரைக்காஞ்சி

          பத்துப்பாட்டு நூல்களில் ஆறாவதாக இடம் பெற்றுள்ள மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டதுவஞ்சியடிகள் விரவிவரும் இது ஆசிரியப்பாவால் ஆனதுதலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பல்வேறு நிலையாமைகளை அறிவுறுத்தி மாங்குடி மருதனார் பாடிய இந்நூல் புறப்பொருள் சார்ந்தது.


          மதுரை அரசனுக்குக் காஞ்சித் திணை பற்றிக் கூறிய இந்நூல் மதுரைக்காஞ்சி ஆனதுபுறத்திணை ஏழனுள் காஞ்சி நிலையாமை பற்றியதாகும்.   


          1889ஆம் ஆண்டு .வே. சாமிநாதையர் இதைப் பதிப்பித்துள்ளார்நச்சினார்க்கினியர் இதற்கு உரை வரைந்துள்ளார்.

                  
நெடுநல்வாடை

          நெடுநல்வாடை, பத்துப்பாட்டு நூல்களுள் ஏழாவதாக இடம் பெறுவது.  188 அடிகளைக் கொண்ட இந்நூல், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இயற்றியதுதிருமுருகாற்றுப்படை ஆசிரியரும் இவரே ஆவார்.


          பகை முடிக்கப் போர் புரியச் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் தலைவியின் துயரை நீக்கச் செவிலித்தாய் கொற்றவையை வேண்டுவதாக இந்நூல் அமைந்துள்ளதுதலைவனைப் பிரிந்த தலைவிக்கு நெடுவாடைபாசறைக்கண் இருந்த தலைவனுக்கு நல்வாடை என இரு நிலைகளை உணர்த்துவதால் இது நெடுநல்வாடை என்றழைக்கப்பெற்றது.

          அகப்பொருள் செய்திகளை மிகுதியாகக் கூறும் இதை அகப்பாடல் என்னாது, வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம் என்று பாண்டியனின் அடையாளப் பூவான வேம்பு பேசப்படுவதால் புறப்பாடல் என நச்சினார்க்கினியர் கருதுகிறார்.  தலைவன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமையால் அகப்பாடல் என்று கூறல் சரியானது.

          1889ஆம் ஆண்டு .வே. சாமிநாதையரால் இது பதிப்பிக்கப்பெற்றதுநச்சினார்க்கினியர்  இந்நூலுக்கு   உரை  எழுதியுள்ளார்.    


குறிஞ்சிப்பாட்டு

          பத்துப்பாட்டின் எட்டாம் பாட்டு குறிஞ்சிப்பாட்டுகபிலர் பாடிய இந்நூல் பெருங்குறிஞ்சி என்றும் பெயர் பெறும்இது 261 அடிகளைக் கொண்டதுஆசிரியப்பாவால் இயன்றதுஇது ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தப் பாடப்பட்டதாகும்தமிழ் என்பது இங்கு அகப்பொருள்இந்நூலில் 99 மலர்களின் பெயர்கள் அடுக்கிச் சொல்லப்பட்டுள்ளன.

          கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய பாரியின் உற்ற நண்பர் கபிலர்புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்ற பாராட்டுக்குரியவர்பாரி இறந்தபின் பாரிமகளிரை மணஞ் செய்விக்கும்  பொறுப்பை ஏற்றார்குறிஞ்சி நிலத்தின் இயற்கை அழகு, மக்கள் வாழ்க்கை, குறிஞ்சித் திணையின் உரிப்பொருளாகிய கூடல் ஆகியவற்றைச் சிறப்பித்துப் பாடியதால் குறிஞ்சிக்குக் கபிலர் என்று அவர் போற்றப்பட்டார்.       

இந்நூல் 1889 ஆம் ஆண்டு .வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப் பெற்றதுநச்சினார்க்கினியர் இந்நூலுக்கு உரையெழுதியுள்ளார்.

பட்டினப்பாலை

          பத்துப்பாட்டின் ஒன்பதாம் பாட்டாகிய பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.  301 அடிகளைக் கொண்டது.  பெரும்பாலும் வஞ்சியடிகளால் பாடப்பட்ட இந்நூல் வஞ்சி நெடும்பாட்டு எனவும் அழைக்கப்பெறும்.  பெரும்பாணாற்றுப் படையின் ஆசிரியரும் இவரேயாவார்.  இந்நூலைப் பாடியதற்காகக் கரிகாற்பெருவளத்தான் இவருக்குப் பதினாறு நூறாயிரம் (16 இலட்சம்) பொற்காசுகள் பரிசளித்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.  இஃது அகப்பொருள் சார்ந்தது.

          1889 ஆம் ஆண்டு உ.வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்றது.  நச்சினார்க்கினியர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.
மலைபடுகடாம்

          மலைபடுகடாம் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்பத்துப்பாட்டுள் இறுதிப் பாட்டு இதுபுறப்பொருள் பற்றியதுபல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் இதன் பாட்டுடைத் தலைவன்திருவண்ணாமலை அருகில் உள்ள செங்கம் தான் அன்றைய செங்கண்மா என்ற ஊராகும்இது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்பெறும்.
­

.வே. சாமிநாதையரால் 1889 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்ற இந்நூலுக்கு  நச்சினார்க்கினியர்  உரை வரைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக