திங்கள், 4 மே, 2015

உலகத் தோற்றம்

உலகத் தோற்றம்

உலகம்
 தமிழ்ச் சான்றோர் - கிரேக்க விஞ்ஞானிகள் – ஒப்பிடுக.
உல் = உருண்டை, உலகம்  = உயிகள் உறையும் இடம்

மாநிலம் இயலா முதன்முறைஅமயத்து
                                                கடுவன் இளவெயினனார், பரிபா. 3 : 91
நீரின் நடுவில் மிகப் பெரிய நிலப் பரப்புத் தோன்றாத முதல் ஊழிக் காலத்தில்

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
                                               தொல். 1589 : 1,2
உலகம் (ஐவகை இயற்கையும்) முத்தும் மணியும் பவளமும் போலக் கலந்தும் செம்பும் பொன்னும் வெள்ளியும் உருக்கி ஓட்டினார் போல மயங்கியும் கிடப்பது. காண்க. இளம்பூரணர் உரை.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் ... – குறள்.1031

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு. குறள். 27

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
                              முரஞ்சியூர் முடிநாகராயர், புறநா. 2 : 1 -6
 காண்க. உரை

பரிதி சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம்
                                               வான்மீகியார், புறநா. 358 : 1
சூரியனால் சூழப்பெற்ற, பயன் பொருந்திய பெரிய நிலவுலகம்.

அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது
                                                        கல்லாடனார், புறநா. 371 : 1
அகன்ற இடத்தை உடைய இந்நிலவுலகத்தின்கண் எம்மைப் பாதுகாக்கும் புரவலரைக் காணப்பெறாமையான்
0

இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
                                   ஐயாதிச் சிறுவெண்டேரையர், 363 : 1
கரிய கடல் சூழ்ந்த இப்பெரிய நிலவுலகத்தை.

 மயங்குஇருங் கருவிய  விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண் என பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்
                                 மார்க்கண்டேயனார், புஏஅநா. 365 : 1-3
தம்மிற கலந்து மழை, மின்னல் முதலியவற்றின் தொகுதியை உடைய விசும்பை முகனாகவும் விசும்பின்கண் இயங்கும், ஞாயிறும் திங்களும் ஆகிய இருசுடர்களைக் கண்ணாகவும் கொண்ட , பலவகையாலும் மாட்சிமைப்பட்ட நிலமகள், இடம்விட்டு இடம் பெயரும்காற்று இயங்காத உயிர்களின் இயக்கம் அற்ற விசும்பைக் கடந்து.,.. நிலமகளுக்கு விசும்பு
முகம் ; இருசுடர்கள் கண்.

                                               நீர் இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
     வான் இன்று அமையாது ஒழுக்கு.                                              குறள். 20
         
எவ்வகை மேம்பட்டார்க்கும் நீர் இன்றி உலகியல் அமையாது  ; அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது  

                                                                            நீரின்று அமையாது உலகு        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக