திங்கள், 18 மே, 2015

கற்பு எனப்படுவது

கற்பு எனப்படுவது களவின் வழித்தே
                                                                                      இறை.கள.15 : 2
கற்பு என்று சிறப்பிக்கப்பட்ட ஒழுக்கம் களவு ஒழுக்கத்தின் வழியே நிகழ்வதாம்.கற்பு, களவில் வற்புறுத்தப்படுகிறது களவு அல்லாத நிலையில் இயல்பாய் இருப்பதாம்.                                                     களவின் வழித்தே  கற்பு
இந்நூற்பா உணர்த்துவது, கற்பு என்று வற்புறுத்திக் கூறுவது களவு வழிப்பட்ட காதலுக்கே என்றாகிறது. களவில் கற்பு சிதைவுறும் என்று கருத இடமுண்டு. பிறன் மனை நயத்தலில் கற்புக்கேடும் உண்டாகையால் கற்பொழுக்கம் பேசப்படுகிறது.களவு வழி நிகழாத திருமணத்திற்கு கற்பு இயல்பென மொழிதல்  கொள்ளப்பெறும்.

                                                          -ஆய்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக