வியாழன், 21 மே, 2015

41 - செவ்விலக்கிய நூல்கள்

41 -  செவ்விலக்கிய நூல்கள்
கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலானவை

ஓர் அறிமுகம்
  தொல்காப்பியம்- எட்டுத்தொகை – பத்துப்பாட்டு – பதினெண்கீழ்க்கணக்கு – சிலப்பதிகாரம் – மணிமேகலை – முத்தொள்ளாயிரம் – இறையனார் களவியல்

எட்டுத்தொகை
நற்றிணை


            எட்டுத்தொகையுள் முதலாவது நற்றிணை. திணை என்றால் ஒழுக்கம்நல்திணை என்றால் நல்லொழுக்கம். தொகை நூல்களை அமைத்த காலத்தில் திணையொழுக்கங்களில் நல்ல மரபும் பண்பும் அமைந்த செய்யுட்களைத் தேர்ந்தெடுத்து இந்நூலைத் தொகுதியாக்கினர் எனக் கருதலாம்இந்நூலைப் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி தொகுப்பித்துள்ளார்.

            இந்நூல் 9 முதல் 12 அடிகளைக் கொண்ட 400 பாக்களை உடையது.   இப்பாடல்கள் 275 புலவர்களால் பாடப்பட்டுள்ளனஅகப்பாடலாக இருப்பினும் கொடை, ஆட்சிமுறை, ஆட்சிப்பரப்பு, அறப்போர் முதலிய புறப்பொருள் குறித்தும் இந்நூல் பேசுகிறது.

            இந்நூலை முதன்முதலில் 1915ஆம் ஆண்டு, பின்னத்தூர் . நாராயணசாமி ஐயர் தாம் எழுதிய உரையுடன் பதிப்பித்து வெளியிட்டுள்


குறுந்தொகை

            எட்டுத்தொகை நூல்களுல் இரண்டாவதான இந்நூல் நல்ல குறுந்தொகை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றது. தொகுத்தவர் பூரிக்கோ பேராசிரியர் இந்நூலின் 380 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார். எஞ்சிய 20 செய்யுள்களுக்கு நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார் என்ற குறிப்புள்ளது. 4 அடிச் சிற்றெல்லையும் 8 அடிப் பேரெல்லையுமுடைய அகவற் பாக்களால் ஆனதுஇந்நானூறு பாடல்களையும் 205 புலவர்கள் பாடியுள்ளனர்இப்பாடல்கள் அனைத்தும் அகப்பொருள் பற்றியே நுவல்கின்றன.

           
            இந்நூலை முதன்முதலில் 1915ஆம் ஆண்டு திருக்கண்ணபுரத்துச் சௌரிப்பெருமாள் அரங்கனார் தாமே எழுதிய உரையுடன் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
ஐங்குறுநூறு

எட்டுத்தொகையுள் மூன்றாவதாய் அமையும் இந்நூல் நூறு நூறு பாக்களால் ஐந்திணை ஒழுக்கங்களைத் தனித்தனியே விளக்குகின்றமையின் ஐங்குறுநூறு என்று பெயர் பெற்றதுஇதன் அடிச் சிற்றெல்லை 3 அடி பேரெல்லை 6 அடி.

ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்.  தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை என்னும் சேர மன்னன்.

இந்நூலுள் மருதத்தை ஓரம்போகியாரும் நெய்தலை அம்மூவனாரும் குறிஞ்சியைக் கபிலரும் பாலையை ஓதலாந்தையாரும், முல்லையைப் பேயனாரும் பாடியுள்ளனர்.
 
இந்நூல் களவு, கற்பு என்னும் அகஒழுக்கங்கள் இரண்டையும் பற்றிப் பேசுகிறது.

இது முதன்முதலில் 1903ஆம் ஆண்டு .வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப் பெற்றது.


                                            பதிற்றுப்பத்து

பாடினோர்
            பாடப்பட்டோர்
இரண்டாம்பத்து

-
குமட்டூர் கண்ணனார்


-
இரண்டாம் இமயவரம்பன் நெடுஞ்சேரன்


மூன்றாம் பத்து

-
பாலைக் கௌதமனார்-
மூன்றாம் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்வன்

நான்காம்பத்து

-
காப்பியற்றுக் காப்பியனார்-
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்

ஐந்தாம் பத்து
-
பரணர்-
கடல் பிறக்கோட்டிய செங்குட்வன்


ஆறாம் பத்து
-
காக்கைப் பாடினியார்
நச்செள்ளையார்-
ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்
ஏழாம் பத்து
-
கபிலர்


-
செல்வக்கடுங்கோ வாழியாதன்எட்டாம் பத்து

-

அரசில்கிழார்


-
தகடூர் எறிந்த பெருஞ்சேரல்
இரும்பொறை

ஒன்பதாம் பத்து

-
பெருங்குன்றூர் கிழார்


-
குடக்கோ இளஞ்சேரல்  இரும்பொறை
 தொகை நூல்களுள் நான்காவதாக இடம் பெறும் பதிற்றுப்பத்து, பத்துப்பத்து அகவற் பாக்களால் ஆன நூறு பாடல்களைக் கொண்டது.   சேர மன்னர்களைப் பற்றிப் பாடிய இந்நூலில் முதற் பத்தும் கடைசிப் பத்தும் கிடைக்கவில்லைபதிற்றுப்பத்துப் பாடலின் சிற்றெல்லை ஐந்து அடியும் பேரெல்லை ஐம்பது அடியும் ஆகும்.

இந்நூல் புறப்பொருள் சார்ந்ததாகும். இதனைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் பற்றிய குறிப்பு கிடைக்கவில்லைஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றைப் புலப்படுத்தும் குறிப்புகள் அமைந்துள்ளன.

இந்நூல் 1904ஆம் ஆண்டு .வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்றது.


பரிபாடல்

எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதான பரிபாடல் ஓங்கு பரிபாடல் என உயர்ந்தோரால் போற்றப்படுகிறதுஇந்நூலை  13 புலவர்கள் பாடியுள்ளனர்இந்நூலுக்குப் பரிமேலழகர் உரை வகுத்துள்ளார்இந்நூற்பாடல்களின் சிற்றெல்லை 25 அடி பேரெல்லை 400 அடி  இந்நூலில் திருமாலைப்பற்றி 8 பாடல்களும், முருகனைப் பற்றி 31 பாடல்களும், காடுகிழார் பற்றி 1 பாடலும், வையையைப்  பற்றி 26 பாடல்களும், மதுரையைப் பற்றி 4 பாடல்களும் இருந்ததாகப்  பாயிரம் குறிப்பிடுகிறது.   ஆனால் தற்போது கிடைப்பவை மொத்தம் 22 பாடல்கள் மட்டுமே. திருமாலைப் பற்றி 6 பாடல்களும் முருகனைப் பற்றி 8 பாடல்களும் வையையைப் பற்றி 8 பாடல்களும்  இதில் அடங்கியுள்ளன.

இந்நூல் திருமாலையும் முருகப் பெருமானையும் வையை ஆற்றையும் வாழ்த்துவதாகப் பாடப்பெற்றுள்ளது

பரிபாடல் இசைப்பா என்பது, 'பரிபாட்டென்பது இசைப்பா ஆதலான்' எனவரும் பரிபாடல் உரையால் அறியப்பெறுகிறதுஇது பண் வகையால் தொகுக்கப்பெற்றது. பரிபாடலில் 12ஆவது பாடல் வரை பாலை யாழ் என்றும்அதற்கு  மேல் 17ஆவது பாடல்வரை நோதிறம் என்றும், அதற்கு மேல் காந்தாரம் என்றும் அடைவு செய்யப்பெற்றுள்ள முறைமையால் அறியப்பெறும்.

இந்நூல் பரிமேலழகர் உரையுடன் 1918ஆம் ஆண்டு .வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.கலித்தொகை

தொகை நூல்களுள் ஆறாவதாக இடம்பெறும் கலித்தொகை, 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.

இது நால்வகைப் பாக்களுள் கலிப்பாவினால் இயற்றப்பெற்றமையால் கலித்தொகை எனப் பெயர்பெற்றதுதமிழர்களின்  ஐந்திணை ஒழுக்கத்தை அறம் பிறழா வகையில் அமைத்துக் காட்டுகிறது இந்நூல்திணைக்கொருவராக ஐவரால் பாடப்பட்டது இதுபாலையைச்  சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவும்                (36 பாடல்கள்), குறிஞ்சியைக் கபிலரும் (29 பாடல்கள்), மருதத்தை மருதனிள நாகனாரும் (35 பாடல்கள்), முல்லையைச் சோழன் நல்லுருத்திரனும் (17 பாடல்கள்)நெய்தலை நல்லந்துவனாரும் (33 பாடல்கள்பாடியுள்ளனர்கலித்தொகையில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன.

இந்நூல் முதன்முதலில் நச்சினார்க்கினியர் உரையுடன் 1887ஆம் ஆண்டு                   சி. வை. தாமோதரம்  பிள்ளையால் பதிப்பிக்கப்பெற்றது.


அகநானூறு

தொகை நூலுள் ஏழாவதான அகநானூறுநானூறு அகவற் பாக்களால் ஆனதுஅகப்பொருள் பற்றியதுபுலவர்கள் பலரால் இயற்றப்பட்டு மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மரால் தொகுக்கப்பட்டதுதொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதிஅகநானூறு மூன்று பகுதிகளைக் கொண்டதுஅவை களிற்றியானை நிரை, (1 முதல் 120 பாடல்கள்)  மணிமிடைபவளம் (121 முதல் 300 வரை)  நித்திலக் கோவை (301 முதல் 400 வரை) என்பனவாகும்இதன் சிற்றெல்லை 13 அடியும் பேரெல்லை 31 அடியும் ஆகும்அகநானூறு நெடுந்தொகை எனவும் அழைக்கப்பெறுகின்றது.

 அகநானூற்றில் ஒற்றைப்படை எண்களைப்( 1,3,5,7,9) பெறும் பாடல்கள் பாலைத்திணை இரண்டு எட்டு என முடியும் எண்ணுள்ளவை  (2, 12, 22, 8,18, 28)குறிஞ்சித்திணை.   நான்கில் முடியும் எண்ணுள்ளவை (4, 14, 24) முல்லைத்திணைஆறில் முடியும் எண்ணுள்ளவை (6,16,26)  மருதத்திணை.   சுழியில் முடியும் எண்ணுள்ளவை (10, 20, 30) நெய்தல் திணை.   உருத்திரசன்மர் மிகத் திறமையாகத் திட்பநுட்பத்துடன் நானூறு அகப்பாடல்களையும் தொகுத்துள்ளமை இதனால் விளங்கும்.

இந்நூல் 1918ஆம் ஆண்டு இரா. இராகவையங்காரால் பதிப்பிக்கப்பெற்றது.


புறநானூறு

தொகை நூலுள் எட்டாவதான புறநானூறு 400 அகவற் பாக்களை உடையதுபுறப்பொருள் பற்றியது. பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார்முரஞ்சியூர் முடிநாகராயர் முதல் கோவூர்கிழார் முடிய 157 புலவர்களால்
பாடப்பட்டது, இந்நூல்பாடப்பெற்றோர் 178 பேர்.   இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் யார் என்று தெரியவில்லை. இந்நூலின் பாடல்கள் 3 அடிச் சிற்றெல்லையும் 40 அடி பேரெல்லையும் கொண்டது.

பண்டைத் தமிழகத்தின் வரலாற்றுப் பெட்டகமாகப் புறநானூறு திகழ்கிறது.    இதனை கடைச்சங்க நூலாக நக்கீரர் இறையனார் களவியல் உரையில் குறிப்பிடுகின்றார். புறநானூற்றில் தமிழகத்தின் கோநகரங்கள், துறைமுகங்கள், மலைகள், ஆறுகள், கடல்கள்காடுகள்  பற்றிய செய்திகள் உள்ளனபுரவலர் போற்றிய புலவர்கள், புலவர்கள் போற்றிய புரவலர்கள், போர்த் தினவுற்ற காளையர்கள், குறுநில மன்னர்கள், மறக்குடி மகளிர்கள் பற்றிய குறிப்புகள் மண்டிக் கிடக்கின்றன.


இந்நூல் 1894ஆம் ஆண்டு உ. வே. சாமிநாதையரால் பழைய உரையுடன் பதிப்பிக்கப் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக