திங்கள், 11 மே, 2015

தழை ஆடை

தைந்நீராடல்
………………….நோன்பியர்
தையூ ணிருக்கையில் தோன்றும் நாடன்
   ……………………….. நற். 22: 6,7
நோன்புடையார் தைத் திங்கள் பிறப்பில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல் போல….
– தழை ஆடை
கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும் ...
                    ஒளவையார், குறுந். 80 : 1 – 3
கூந்தலைப் போன்ற நெறிப்பினையுடைய ஆம்பலின் முழுமையான செறிந்த இலைகளைத் தழையாடையாக உடுத்தி, பெருவெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி யாம் புனல்விளையாட்டை அயர்கச் சென்றோம்.
இது மருத நிலத்துத் தழை ஆடை  - பரத்தை கூற்று – குறிஞ்சி , குறமகள் அசோக மரத்தின் பெரிய தழை- குறுந். 214. அகநா.331,390.  ஐங்.191- தழையாடை -
 தழை ஆடை உடுத்தும் வழக்கம் -  இம்மக்களின் வாழ்க்கை முறை – ஆய்க.   
 முதன்மை நோக்கு :  மானிடவியல் ஆய்வு. 
மேலும் காண்க : புறநா. 248                   

தழை ஆடை
மனைநகு வயலை மரனிவர் கொழுங்கொடி
அரிமலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து
           மருதம் பாடிய இளங்கோ, அகநா.176 : 13-15
 வீட்டின்கண் உள்ள மரத்தின் மீது படரும் செழுமையான  வயலைக் கொடியினை, விளங்கும் மலர்களையுடைய ஆம்பற் கொடியுடன் சேர்த்துக் கட்டிய தழை ஆடையை உடுத்திக்கொண்டு, விழாவில் கூத்தாடுகின்ற பரத்தையரோடு நீயும் பொலிவுடன் கூடிக்குலவிக் கூத்தாடினாய் ....
 தழை ஆடை உடுத்துவோர்  - ஆய்க
-தழையாடை
நாடு பல சேர்ந்தது தேயம் – சேரி – ஊரின் ஒரு பகுதி வி.ஐ
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ
காடும் கானமும் அவனொடு துணிந்து
நாடும் தேயமும் நனிபல இறந்த
                          கயமனார், அகநா.383: 2-4
அல்குலில் உடுத்தும் தழையாடை – தளிர் கொடுக்கும் – வயலைக் கொடி
220மகன்றில்-இரும்புள்அகம்220
தழை ஆடை – நெய்தல்
தழையணி யல்குற் செல்வத் தங்கையர்  -3
 தழை அணியினை அணிந்த அல்குலையுடைய செல்வமிக்க தங்கைமார் –  விலை கூறி மீன் விற்றனர்.

  மேலாடை இல்லை
தண்கயத்து அமன்ற ஒண்பூங் குவளை
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்புஆர் கண்ணி
பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி
நல்வரல் இளமுலை நோக்கி நெடிது நினைந்து
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் ..............................
                       கருவூர்க் கண்ணம்பாளனார், அகநா.180 : 5- 9                                                                                                       
தோழி, நான் மணல் மேட்டில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த பொழுது. குதிரை பூட்டிய தேரிலே விரைந்து வந்த தலைவன் குளிர்ந்த குளத்தில் பூத்த நிறைந்த குவளை அரும்புகளை மலர்வித்துக்கட்டிய மாலையைப் பின்னலைக் கொண்ட என் முதுகில் தாழ்ந்து தொங்குமாறு நான் விரும்பாதே சூட்டி, நன்கு வளர்ந்து எழுகின்ற என் இளமுலையை நோக்கினான், நெடிது நினைந்து நில்லாது சென்றுவிட்டான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக