சனி, 16 மே, 2015

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று  ஆவதூஉம்
                                                                                 சிலப். பதி. 55
அரசியலில் தவறு இழைத்தோர்க்கு அறமே கூற்றாக அமைந்து அவர்தம் உயிரைப் பறிக்கும்.

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
                                                                              சிலப்.பதி. 56
கற்பிற் சிறந்த பெண்டிரை உயர்ந்தோர் போற்றிப் புகழ்வர்.

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉதும்
                                                                                சிலப். பதி. 57
முன்செய்த தீவினை உருக்கொண்டுவந்து தன் பயனை நுகர்விக்கும்.
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
                                                                              சிலப். 5: 7  1 – 73
எம் பெருநில மன்னன் காக்கும் இப்பெரிய நிலம் முழுதும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வளனும் வசியும் சுரக்க என வாழ்த்தினர்.


பையுள் நோய் கூரப் பகல் செய்வான் போய்வீழ
வையமோ கண் புதைப்ப வந்தாய் மருள்மாலை
                                                                                     சிலப். 7. 50:1,2
கதிரவனும் மேற்றிசையிலே சென்று மறைந்து விட்டான். வையகமே கண்மூடித் துயில்கின்றது. காம நோயோ மிகுதியாகின்றது. மயக்கத்தைத் தரும் மாலைப் பொழுதே நீயும் வந்தாயே.


மன்னுயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்னிள வேனில் இளவரசாளன்
                                                             , சிலப். 8: 56, 57
உலகிலே நிலைபெற்றிருக்கும் உயிர்களையெல்லாம் துணைகூட்டி மகிழ்விக்கும் இனிய இளவேனிலாகிய இளவரசாளனும் வந்தனன்.
                                                                                         

செய்தவம்  இல்லோர்க்குத் தேவர்  வரம் கொடார்
பொய் உரையேயன்று பொருள் உரையே
                                                                                          சிலப். 9: 16, 17
தவ ஒழுக்கம் இல்லாதார்க்கு எந்தக் கடவுளும் வரம் அருளுவதில்லை; இது பொய்யன்று உண்மையே................................. தொடரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக