முதுமொழிக்
காஞ்சி --- பொன்மொழிகள்
                        
                      மதுரைக் கூடலூர்க் கிழார் 
ஆர்கலி  உலகத்து மக்கட்கு
எல்லாம்
ஓதலின் சிறந்தது ஒழுக்கம் உடைமை
                                                                                       1: 1
கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லாம்
கற்றலைவிடச் சிறந்தது ஒழுக்கமுடன் திகழ்வது.
வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை
                       
                                                                .
1: 4
வளமையாய் இருத்தலைவிட உண்மையாய் இருத்தல் மேலானது.
சீருடை ஆண்மை செய்கையின் அறிப
                                                                    2
: 10
 முயற்சியின் வலிமை முடிக்கும் செயலால் அறியப்படும்.
அறத்தாற்றின் ஈயாதது ஈகையன்று
                     
                                                         .
5 : 8
அறவழியில் கொடாதது கொடை ஆகாது.
இரத்தலின் ஊங்கு இளிவரவு 
இல்லை
                         
                                                .
6 : 9
இரத்தலைவிட இகழ்ச்சியானது வேறில்லை.
பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய்
                                                                                   7 : 10
பொருள் ஆசை கொண்டவன் அறநெறியில் வாழ்தல் இல்லை.
துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது
                                                                                        8
: 5
முயற்சியால் வரும் துன்பங்களைத் தாங்குவார்க்கு இன்பம்
எளிதாகக் கிடைக்கும்.
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்
                     
                                                                      10
: 1
இவ்வுலகத்தில் உள்ள மக்கள் எல்லாருள்ளும்  உயர்வடைய விரும்புவோன் பிறரிடம் காணப்படும்
சிறந்த இயல்புகளையே பேசப் பழகுதல் வேண்டும்.
                                             
முற்றும்
சிறந்த இயல்புகளையே பேசப் பழகு
பதிலளிநீக்கு