சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 10
ஓரி
………………….. நளிசினை
நறும்போது கஞலிய
நாகுமுதிர் நாகத்து
குறும்பொறை
நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரை
காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை
ஓரியும் …..
இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 107 – 111
செறிந்த கொம்புகளில் நறுமணம்
மிக்க பூக்கள் நிறைந்த சுரபுன்னைகளையும் குறிய மலைகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தாடுவோர்க்குக்
கொடுத்தவனும் – காரி என்னும் பெயர்பெற்ற குதிரையை
உடைய காரி என்பானோடு போர் செய்தவனும் ஆகிய ஓரி என்னும் வள்ளலும்…..
ஈண்டுக் குறிப்பிட்ட - பேகன். பாரி. காரி. ஆய். அதிகன். நள்ளி. ஓரி ஆகியோர்
கடையெழு வள்ளல்கள் ஆவர்.