மடகாசுகர் – சல்லிக்கட்டு--4
காளையாடல்
மடகாசுகர்
பழங்குடி மக்கள் ஏறுதழுவலை “ காளையாடல்” அஃதாவது காளையைக் கட்டித்தழுவி அதனோடு நடனமாடுதல்
என்று பொருளுரைக்கின்றனர். இவர்களும் காளையின் திமிலைப் பிடித்துத் தொங்கியபடியே விளையாடுகின்றனர்.
இளஞர்களுக்குக் காளையோடுஆடச் சிறப்பான பயிற்சியும்
அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு
ஆண்மகனும் தன் வாழ்நாளில் ஏறு தழுவலை நிகழ்த்தியே ஆகவேண்டும். சிறுவர்களுக்குப் பத்து
வயது தொடங்கிய நாளிலிருந்து காளையத் தழுவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சேறு நிறைந்த
வயலில் காளைகளைவிட்டுச் சிறுவர்கள் களமிறக்கப்படுகிறார்கள். சேறு நிறைந்த வயல், காளைகளின்
வேகத்தைக் கட்டுப்படுத்துவதால் சிறுவர்கள் எளிமையாகப் பயிற்சி பெறுகின்றனர்.
நிகழ்த்துக் களம்
ஏறுதழுவல்,
வட்டமான களத்தில் சுற்றிலும் பாறைக்கற்கள்நடப்பட்டு மண்கொண்டு மெழுகி வைத்துள்ளனர்.
இக்களம் நிலையானது.வாடிவாசல் போன்ற ஒரு வழியும் உண்டு. ஒரே நேரத்தில் ஐந்தாறு காளைகளை
உள்ளேவிட்டு ஏழெட்டு இளைஞர்கள் களத்தில் இறங்கிக் காளையின் திமிலைப் பிடித்து, காளை
துள்ளிக் குதித்துச் சுற்றி சுற்றி ஓடிவர, இளஞர்களும் காளையை விடாது பற்றிச் சுற்றிவருகின்றனர்.
ஒரு காளைக்கு ஓர் இளைஞர் என்ற விதியும் உண்டு. காளையைத் தழுவும் இளைஞர்கள் களத்தில்
இறங்குவதற்குமுன் தலைமைப் பூசாரியிடம் அருள் பெறுகின்றனர். ஓர் ஆண்மகணை ஆண்மகன் என்று
அடையாளப்படுத்துவதற்கே ஏறுதழுவல் நடபெறுகிறது. இவ்விடத்தில் மேற்குறித்துள்ள சங்க இலக்கியச்
செய்யுட்களை நோக்குங்கள்.
முடிவுரை
சல்லிக்கட்டு, தென் குமரியில் கடல்கோள் நிகழ்வதற்கு
முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துவந்துள்ளது என்றே கொள்ளவேண்டியுள்ளது. இதனால் தமிழர்தம் வரலாறு, கடல்கொண்ட
தென்னாட்டில் தோன்றி, உலகம் முழுதும் பரவிக்கிடக்கிறது என்ற உண்மையும் தெளிவாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக