மெய்ப்பொருள்
காண்பது அறிவு -4
“பொங்கரின் நுழைந்து வாவி
புகுந்து பங்கயம் துழாவி
பைங்கடி மயிலை முல்லை
மல்லிகைப் பந்தர் தாவி
கொங்கலர் மணம் கூட்டுண்டு
குளிர்ந்து மெல்லென்று தென்றல்
அங்கங்கே கலைகள் தேரும்
அறிவன்போல இயங்கும் அன்றே.”
பரஞ்சோதியார்,
தென்றலோடு அறிஞரை ஒப்புமைப்படுத்தி… எங்கெங்கே சென்றாலும் அங்கங்கே கலைகளை ஆராய்கின்ற
அறிஞரைப்போலத்
தென்றல்
சோலைக்குள் புகுந்து ; தாமரைதடாகத்தில் படிந்து ; பூப்பந்தர்தோறும் நுழைந்து ; தேனும்
மணமும் நுகர்ந்து ; குளிர்ந்து மெல்லென்று வீசுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக