திருக்குறள் -சிறப்புரை :893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.--- ௮௯௩
செய்ய விரும்பிய செயல் கெட்டுப்போக வேண்டுமானால் அறிவுத்திறன் மிக்க பெரியாரிடத்தில்
அறிவுரை பெறாமல் செய்க ; தனக்கே கேடு வரவேண்டுமானால் அப்பெரியாரை இகழ்ந்து விட்டுப்போ.
“தேவரே கற்றவர் கல்லாதார்
தேருங்கால்
பூதரே முன் பொருள் செய்யாதார்
ஆதரே. ---சிறுபஞ்சமூலம்.
கற்றவர் உயர்ந்தோர் ; கல்லாதார் பூதபசாசுகள் ; இளமையிலேயே பொருள் தேடாதவர்
அறிவிலார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக