புதன், 27 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :919


திருக்குறள் -சிறப்புரை :919
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.---- ௯௧௯
பொருள் கொடுப்பார் யாவரையும் முயங்கும் ஒழுக்கமற்ற விலைமகளிரின் மெல்லிய தோள்கள் தம் குற்றத்தையும் உணராத அறிவற்ற கீழ்மக்கள் சென்று மூழ்கி அழுந்தும் நரகமாகும்.
“ வண்டு என மொழிப மகன் என்னாரே.” –நற்றிணை.
மலர் விட்டு மலர் தாவும் வண்டுபோல், மகளிரை நாடும் குணமுடையோரை நல்ல ஆண் மகன் என்று யாரும் கூறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக