வியாழன், 21 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :913


திருக்குறள் -சிறப்புரை :913
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.---- ௯௧௩
பொருள் ஒன்றையே விரும்பும் விலைமகளிர்தம் மனம் ஒப்பாத, பொய்யான காமத்தழுவல், இருட்டறையில் கிடக்கும் பிணத்தைக் காமவெறியில் தழுவியது போன்றதாகும்.
” மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வர்
விலங்கு அன்ன வெள்ளறிவினார்.” –நாலடியார்.
மலங்கு மீனைப்போல் ஏமாற்றும் செய்கை உடைய வேசை மகளிரின் தோள்களைத் தழுவுவோர், விலங்குபோல் அறிவற்றவராவர்.(மலங்கு – விலாங்கு மீன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக