திருக்குறள் -சிறப்புரை :908
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.---- ௯0௮
(நன்று ஆற்றார்; நல் நுதலாள்)
மனைவியின் விருப்பப்படியே நடக்கின்றவர்கள் நண்பருக்கு நேர்ந்த குறையை
நீக்க இயலாதவர்களாகவும் அறவழியில் நல்லன செய்ய முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
“ செறுவோர் செம்மல் வாட்டலும்
சேர்ந்தோர்க்கு
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு
இல்….” –அகநானூறு.
தம் பகைவர் செருக்கினை ஒழித்தலும் தம்மைச் சேர்ந்தோர்க்கு ஊறு (துன்பம்)
நேர்ந்தவிடத்து உதவி செய்தலாகிய ஆண்மையும் வீட்டில் சோம்பி இருப்போர்க்கு இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக