மெய்ப்பொருள்
காண்பது அறிவு -6
”உலகு உயக் கோடற்கு ஒருவன் தோன்றும்
அந்நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது
இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை.” –மணிமேகலை.
பேரறிவு உடையவனும் மெய்ப்பொருள் அனைத்தையும் வழுவின்றி
உணர்ந்தவனும் ஆகிய ஒருவன், இந்த உலகத்தினரை உய்யக் கொள்ளுதல் பொருட்டுத் தோன்றி அருள்வான்.
அந்நாளிலே அவன் உரைக்கும் அறவுரைகளைக் கேட்டோர் அல்லாமல் பிறர் இன்னாதாகிய தம் பிறவியினின்றும்
தப்புவோர் அல்லர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக