திருக்குறள் -சிறப்புரை :899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.---- ௮௯௯
போற்றிப் புகழத்தக்க அறிவுடைய சான்றோர் வெகுண்டெழுந்தால் நாட்டை ஆளும்
அரசனாயினும் அப்பொழுதே அவன் மணிமுடி இழந்து ;அரசையும் இழந்து அழிவான்.
“ பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடு இன்று பெருகிய திருவின்
பாடு இல் மன்னரைப் பாடன்மார்
எமரே.” –புறநானூறு.
பலவாறு எடுத்துக்கூறினாலும் சிறிதளவாயினும் உணரும் உணர்ச்சி இல்லாத, பெருஞ்
செல்வத்தைப் பெற்றுள்ள பெருமை இல்லாத மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பார்களாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக