வியாழன், 28 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :920


திருக்குறள் -சிறப்புரை :920
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. ---- ௯௨0
இருவகைப்பட்ட மனமுடையவராகிய பொதுமகளிரும் கள்குடித்தலும் சூதாடுதலும் ஆகிய இம்மூன்றும் திருமகளால் நீக்கப்பட்டவர்களின் தொடர்பு ஆகும்.
நாவின் கிழத்தி உறைதலால் சேராளே
பூவின் கிழத்தி புலந்து. –நாலடியார்.
 தொன்மைச் சிறப்புடைய நாமகளாகிய கலைமகள் அறிவுடையார் நாவிலே உறைவதால்,  செல்வமகளாகிய திருமகள் வெறுப்புற்று அவர் பக்கம் .சேரமாட்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக