திருக்குறள் -சிறப்புரை :917
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள்.---- ௯௧௭
நிறைந்த ஒழுக்கம் இல்லாதவர்கள், பொருள் வேட்கையால் தன் உடலை விலை பொருளாக்கிப் பிறரைச் சேரும் பொதுமகளிரின்
தோள் தோய்வர்.
“பத்தினி இல்லோர் பல அறம்
செய்யினும்
புத்தேள் உலகம் புகார்.”---மணிமேகலை.
கற்பொழுக்கம் இல்லாத பெண்டிர் பலதிறப்பட்ட அறங்களைச் செய்தாலும் உயர்ந்தோர்
உலகம் புகமாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக