செவ்வாய், 26 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :918


திருக்குறள் -சிறப்புரை :918
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.--- ௯௧௮
உயிரென ஓம்பும் ஒழுக்கத்தை ஆராய்ந்து அறியும் இல்லாதவர்களை உரு, சொல், செயல் ஆகியவற்றால் மாயம் பல செய்து மயக்கும் பொதுமகளிரின் பொய்முயக்கம் அணங்கு தாக்குதல் என்பர்.
அணங்கு தாக்குதல் – காமநெறியால் உயிர் கொல்லும் தெய்வமகள்; காமப் பித்துப் பிடித்து ஆட்டுதல் என்பர்.)
“உள்ளம் ஒருவன் உழையது ஆ ஒள் நுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்து எல்லாம் –தெள்ளி
அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பின் அவர்.” –நாலடியார்.
மனம் ஒருவர்மேல் நிற்க, மற்றொருவர் மேல் காமுற்றது போல் நடித்துக் காட்டும் வேசியர் கள்ளக் கருத்தை நன்றாய் அறிந்தபோதும் அறியாத மூடராய் இருப்பவர் யார்  எனில் பாவிகள் என்பதேயாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக