வெள்ளி, 22 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :914


திருக்குறள் -சிறப்புரை :914
பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர். ----- ௯௧௪
பொருளைத் தன் வாழ்க்கைப் பொருளாகக்கொண்ட விலைமகளிரின் பொய்முயக்கத்தை, அருளைத் தன் வாழ்க்கைப் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் அறிவுடையார் விரும்பார்.
“ கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை.” –மணிமேகலை.
கள் குடித்தல், பொய்கூறல், தகாத காமம்கொள்ளல், கொலை செய்தல், களவாடல் ஆகிய ஐவகைக் குற்றங்களும் அறிவுடையோரால் நீக்கப்பட்டவை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக