திருக்குறள் -சிறப்புரை :916
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். ---- ௯௧௬
யாவரையும் ஈர்க்கவிரும்பி ஆடல், பாடல், அழகு என்ற மூன்றினாலும் தன் உடலை
விலைகூறி விற்கும் பொதுமகளிரின் தோளினை, நல்லொழுக்கத்தைப் பேணும் சிறந்த அறிவுடையோர்
விரும்பார்.
“இழுக்கத்தின் மிக்க இழிவு
இல்லை; இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு”---பழமொழி.
ஒழுக்கம் இல்லாததைக் காட்டிலும் மிக்கதோர் இழிவும் இல்லை ; ஒழுக்கத்தைவிட
மிக்கதோர் உயர்வும் இல்லை.
அருமை
பதிலளிநீக்கு