சனி, 30 ஜூன், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -7

மெய்ப்பொருள் காண்பது அறிவு -7
பொற்காலம்
இரும்புக் காலத்திற்குமுன் பொற்காலம் ஒன்று இருந்ததோ என ஐயம் எழுகின்றது.—பாவாணர்.
தமிழர் வாழ்வில் பொன் சிறப்பிடம் பெறுகிறது ; பொன் இன்றிச் சடங்குகள் இல்லை. இங்கே பொன் விளைந்ததா..? பொன்பரப்பி, பொன்மலை, பொன்விளைந்த களத்தூர் இப்படிப் பொன் சுமந்த ஊர்கள் பல உள.
தமிழில் பொன் என்பது  செம்பொன், கரும்பொன், வெண்பொன் எனப் பொதுப்பெயராக வழங்கக் காணலாம். இன்று தென் அமெரிக்கா, ஆத்ரேலியா முதலியன பொன் விளையும் இடங்களாக இருக்கின்றன. இவையாவும் கடல் கொள்ளப்பட்ட தமிழ் நிலப் பகுதி என்பார் பாவாணர். குமரி நாட்டிலும் ஏராளமாய்ப் பொன் கிடைத்திருக்க வேண்டும். குமரிக்கண்டம் மூழ்கிய பின்பும் கொங்கு நாட்டில் மிகுதியாய்ப் பொன் கிடைத்தது. அது கொங்குப்பொன், கோலார் குளாலபுரம் கொங்கு நாட்டைச் சேர்ந்ததே. காவிரிப் பொன் மணலைக் கொழித்ததனால் பொன்னி எனப் பெயர் பெற்றது. இங்கு முற்காலத்தில் ஏராளமாய்ப் பொன் கிடைத்தது.-  எனினும் சங்க இலக்கியத்தின்வழி, கடல்வணிகத்தில் வெளிநாட்டினர் குறிப்பாக ரோமானியர் பெருமளவில் பொன் கொடுத்து ’மிளகு’ கொள்முதல் செய்தனர் என்பதை அறிய முடிகிறது. மன்னர்கள் பொற்றாமரை, பொற்காசு, அணிகலன்களைப்  பரிசாக அளித்துள்ளனர். 

1 கருத்து: