செவ்வாய், 19 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :911


திருக்குறள் -சிறப்புரை :911
92. வரைவின் மகளிர்
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். --- ௯௧௧
ஒருவன் மீது அன்புகொண்டு ஒழுகாது பொருள் விரும்பிப் பழகும் பொதுமகளிரின் இனிய சொற்கள் துன்பத்தையே தரும்.
“ விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின் வேறல்ல – விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.” –நாலடியார்.
விளக்கினது ஒளியும் பொதுமகளிரது அன்பும் இரண்டும் வேறுவகைப்பட்டன அல்ல ; விளக்கில்  எண்ணெய் வற்றிப்போனால் ஒளி நீங்கிவிடும் அதுபோல, கொண்டவனின் கைப்பொருள் குறைந்து போகுமானால் அவ்வேசையர் அன்பும் அற்றுப்போகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக