வியாழன், 28 ஜூன், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -5

மெய்ப்பொருள் காண்பது அறிவு -5
”நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.” –ஒளவையார்.
”12 ஆண்டுகள் வனவாசம் முடித்து, மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் பாண்டவர்கள். அவர்களை அறிய வேண்டி துரியோதனன் பல்வேறு நாடுகளுக்கு ஒற்றர்களை அனுப்பி ஆராய்கின்றான். ஒற்றர்கள், எங்கும் பாண்டவர்களைக் காணவில்லை என்று கூறுகின்றனர். உடனே வீடுமர் பாண்டவர்கள் வாழ்கின்ற நாட்டில் மழை தவறாமல் பெய்யும் அதனால் விளைச்சல் மிகுதியாக இருக்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர், சென்று தேடிப்பாருங்கள் என்றார். அவ்வாறே தேடினர், ஒற்றன் ஒருவன் ‘விராட நாட்டில் நல்ல மழை பெய்து வளம் கொழிக்கிறது, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்’ என்று கூறினான். பாண்டவர்கள் விராட நாட்டில் இருப்பதை அறிந்து கொள்கிறான் துரியோதனன்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக