புதன், 20 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :912


திருக்குறள் -சிறப்புரை :912
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல். --- ௯௧௨
தமக்குக் கிடைக்கும் பொருளின் அளவறிந்து அதற்கேற்ப இனிய சொற்களைக்கூறி மயக்கும் பண்பற்ற விலைமகளிரின் தரம் அறிந்து அவர்களுடன் உறவு கொள்ளாது விலகிவிட வேண்டும்.
“ புதுப் பெருக்கம் போலத் தம் பெண் நீர்மை காட்டி
மதித்து இறப்பர் மற்றையவர்.” –நாலடியார்.
விலைமகளிர் புது வெள்ளம் போலத் தமது அழகைக்காட்டிப் பிறரை மயக்கி, அவர்தம் செல்வத்தைக் கவர்ந்துகொண்டு பிரிந்து சென்றுவிடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக