திருக்குறள் -சிறப்புரை :904
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று.--- ௯0௪
( மறுமை இலாளன் ; வீறு எய்தல்)
மனைவிக்கு அஞ்சி ஒடுங்கி நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவன் செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறாது.
வாழும் போதே பெருமையுடன் வாழாதவன் இறந்தபின் பெருமை பெறுவானோ.. அவனே
-- மறுமைப் பயன் இல்லாதவன்.
மனைவிக்கு அஞ்சி நடப்பவன் பிறர் போற்றும்படியான செயல் எதனையும் செய்ய
இயலாதவன் ஆம்.
“ நட்டோர் இன்மையும் கேளிர்
துன்பமும்
ஒட்டாது உறையுநர் பெருக்கமும்
காணூஉ
ஒருபதி வாழ்தல் ஆற்றுபதில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய
வீங்கிய
மென்முலை முற்றம் கடவாதோர்…”
அகநானூறு.
நெஞ்சே…! காம இன்ப நுகர்ச்சியைவிட்டு நீங்காத நெஞ்சினால் பொருள் ஈட்டாது
சோம்பி இருப்போர், நண்பரும் சுற்றத்தாரும் துன்புறுதலையும் பகைவர் பெருமையுடன் வாழ்தலையும்
கண்டபிறகும் அவர்களோடு ஓரிடத்திலே வாழ்தலைப் பொறுத்திருப்பர். –தலைவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக