திருக்குறள் -சிறப்புரை :922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சன்றோரான்
எண்ணப் படவேண்டா தார். --- ௯௨௨
கள் உண்ணாதே. நல்லவர்கள் உன்னை மதிக்கப்படவேண்டாம் என்று எண்ணினால் குடித்து விட்டுப்
( மடிந்து ) போ.
“ கள்ளார் கள் உண்ணார் கடிவ
கடிந்து ஒரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்து
உரையார் – தள்ளியும்
வாயிற் பொய் கூறார் வடுவரு
காட்சியார்
சாயில் பரிவது இலர்.” ---
நாலடியார்.
குற்றமற்ற அறிவுள்ளவர்கள் திருடார், கள் குடியார், தள்ளத்தக்கவைகளைத்
தள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார், வாய்தவறியும் பொய் கூறார், வறுமை வந்துற்றபோதும் வருந்தும்
தன்மை இல்லாதவராவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக