திருக்குறள் -சிறப்புரை :915
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர். ----- ௯௧௫
உலகியலின் உண்மையறிந்த அறிவிற் சிறந்தவர்கள், பொருள் வேட்கைகொண்ட பொதுமகளிரின்
இழிந்த உறவைத் தேடமாட்டார்கள்.
“கற்புடைய பெண் அமிர்து
கற்று அடங்கினான் அமிர்து.” ---சிறுபஞ்சமூலம்.
கற்புடைய பெண் தன் கணவனுக்கு அமிர்தம் போன்றவள் ; அறிவு நூல்களைக் கற்று
அவற்றின்வழி அடங்கி நடப்பவன் உலகத்திற்கு அமிர்தம் போன்றவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக