திருக்குறள்
-சிறப்புரை
:1293
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல். ---- க ௨ ௯ ௩
நெஞ்சே..!
இங்கே வருந்தியிருக்கும் என்னைத் தேற்றாது, நீ
விரும்பியவாறு அவரிடத்துச்
செல்வதற்குக் காரணம், உலகில் வாழ்ந்துகெட்டவர்களுக்கு நட்புடையார்
இல்லை என்பதாலோ..?
“முட்டின்று ஒருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர் தார்மார்ப கலிஊழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ
இல்.” ---பழமொழி.
மொட்டுகள் முறுக்குடைந்து மலருகின்ற மாலையை உடைய மார்பனே..! குறைவின்றி ஒருவர் செல்வம்
உடையவராக இருக்கும் பொழுது, தன் வீட்டில் சமைத்த உணவை உண்ண ஆயிரம் பேர் வருவர். கலியுகமாகிய காலத்தில், இருந்த செல்வம் எல்லாம்
இழந்த நிலையில், நண்பர்கள் என்று எவரும்
இலர். கெட்டார்க்கு நட்டார் இல் – பழமொழி.
இயல்பான நிலையை எடுத்துரைக்கின்ற திருக்குறள், பழமொழி. நட்டார் என்ற சொல்லினைக் கண்டு வியந்தேன் ஐயா.
பதிலளிநீக்கு