திருக்குறள்
-சிறப்புரை
:1330
ஊடுதல்
காமத்திற்கு
இன்பம்
அதற்கின்பம்
கூடி
முயங்கப்
பெறின். ----- க ௩ ௩0
காமநுகர்ச்சிக்கு, ஊடுதல் இன்பமாகும் ; ஊடல் தணிந்து கூடிமுயங்குதல் காமக் களிப்பைப் பேரின்பமாக்கும்.
“கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே.” ---குறுந்தொகை.
காந்தள் மலரையும் தோற்றிய அரும்புகளிலிருந்து உண்டாகிய
செவ்வி மலர்களாகிய முல்லைப் பூக்களையும் மணம் கமழும் இதழ்களை உடைய குவளை மலர்களோடு
இடையிடையே பொருந்துமாறு கலந்து, அழகாகத் தொடுத்தலில் சிறந்த மாலையைப் போல, நறுமணத்தையுடைய
தலைவியின் மேனி, தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் உடையது
; தழுவுதற்கும் இனிமையுடையது.
மலரினும்
மெல்லிது காமம்
இப்பணியில் என்னை இயக்கிய
சான்றோர்களை நன்றியுடன் போற்றி, நிறைவாக……..தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக