திருக்குறள்
-சிறப்புரை
:1296
தனியே
இருந்து
நினைத்தக்கால்
என்னைத்
தினிய
இருந்ததுஎன்
நெஞ்சு.---- க ௨ ௯ ௬
காதலரைப் பிரிந்து தனிமைத் துயரில் வாடும் என் நெஞ்சம், அவர் செய்த கொடுமைகளையும் சேர்த்து நினைக்கும்பொழுது,
என்னைத் தின்று அழித்துவிடுவதைப் போன்ற துன்பத்தைச் செய்கிறது.
“முள்ளரை இலவத்து ஒள் இணர் வான்பூ
முழங்கு அழல் அசைவளி எடுப்ப வானத்து
உருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும்
கவலை அருஞ்சுரம் போயினர்
தவல் இல் அருநோய் தலைத் தந்தோரே.” –ஐங்குறுநூறு.
முட்கள்பொருந்திய அடிமரத்தை உடைய இலவின் வெண்மையான
கொத்தான பெரிய பூக்கள், முழங்கும் தீயினை அலைத்து வீசும்
காற்று மோதுவதால், வானத்தில் இடியுடம் பிறக்கும் நெருப்புப் போன்ற
நிலத்திலே உதிர்வதற்கு இடமான கவர்த்த வழிகளைக் கொண்ட காட்டைக் கடந்து சென்ற நம் காதலர்
என்றும் நீங்காததும் தன்ங்குதற்கு அரியதுமான துன்பத்தினை நமக்குத் தந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக