வியாழன், 13 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1317


திருக்குறள் -சிறப்புரை :1317

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. --- ௩க ௭

யாம் தும்மியபோது  எப்பொழுதும்போல என்னை வாழ்த்தினாள்,  உடனே  என்ன நினைதாளோயாரை நினைத்துத் தும்மினீர் என்று புலந்து அழுதாள்.

போர்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்
தேர்தர வந்த தெரியிழை நெகிழ்தோள்
ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ இலன்னென வறிது நீ
புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை.” ---அகநானூறு.

போரில் வெற்றிபெற்ற வீரர்கள் வறுவதப்போல,  ஊரில் புகும் நம் தலைவன், தனது தேரில் கொண்டுவந்த, சிறந்த அணி நெகிழ்ந்த தோள்களை உடைய, ஊர் தாங்காத பரத்தையர், பரத்தைமையை மேன்மேலும் தன்பால் சேர்க்க, அதனைத் தாங்க இயலாதவனாக உள்ளான் என்று, மனைவாழ்க்கை மேவிய கற்புடைய மடந்தையாகிய நீ,  பயனின்றி அவனிடத்து ஊடுதல் தகுமோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக