வெள்ளி, 7 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1305


திருக்குறள் -சிறப்புரை :1305

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து. ----- 0

நல்லொழுக்கம் நிறைந்த தலைவருக்கு மேலும் ஓர் அழகாய் அமைவது, பூப்போலும் மலர்ந்த கண்ணை உடைய தலைவியிடம் கொள்ளும் சிறு ஊடலே ஆகும்.

விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டாங்கு
அறனும் பொருளும் வழாமை நாடித்
தற்தகவு உடைமை நோக்கி மற்றதன்
பின்னாகும்மே முன்னியது முடித்தல்.” ------அகநானூறு.

அறனல்லவற்றை என்றும் விரும்பாத உள்ளம் சில நேரம் மயங்கி விரும்புமாயினும் கேட்ட கேள்விகள் அங்குசமாக, மனம் என்னும் மாய யானையை மீட்டு, இல்லறமும் பொருளும் வழுவா வகை அறிந்து, தனது தகுதியை உணர்ந்து அதன்பின்னரே, தான் கருதியதை முடித்தல் உளதாகும். ( இத்தன்மை உடையர், தலைவியிடத்து ஊடல் கொள்ளல் சிறப்புடைத்து என்க.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக