திங்கள், 10 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1312


திருக்குறள் -சிறப்புரை :1312

ஊடி யிருந்தோமாத் தும்மினார் யாம் தம்மை
நீடுவாழ் கென்பாக்கு அறிந்து.---- ௩கஉ

யாம் காதலரோடு ஊடல் கொண்டு பேசாதிருந்த பொழுது ஊடலைத் தணிக்க முயன்றவர், தம்மை நீடு வாழ்க என்று கூறுவோம் என்று கருதித் தும்மினார்.

அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்
பழியிலர் ஆயினும் பலர்புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகிய வெஞ்சொற்
சேரியம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக
நுண்பூண் எருமை குட நாட்டனன என்
ஆய்நலம் தொலையினும் தொலைக என்றும்
நோயிலராக நம் காதலர்………..
………………………………………
நன்னர் ஆய்கவின் தொலையச் சேய் நாட்டு
நம் நீத்துஉறையும் பொருட் பிணிக்
கூடாமையின் நீடியோரே.” -----அகநானூறு.

தோழி..! என்றும் நீங்காத விழாக்களை உடைய, பகைவர்க்கும் அச்சம்தரும் இம் முதிய ஊரின்கண்ணே,  பலரையும்பழிக்காதவராயினும் பழி இல்லாதவராயினும் புறஞ்சொல் கூறுதலாகிய அம்பல் ஒழுக்கத்தினையும், செவ்விய சொல்லையும் உடையராகிய,  சேரிப்பெண்டிர் நம்மை இகழினும் இகழுக
நுண்ணிய வேலைப்பாடமைந்த பூணினை உடைய எருமை என்பானது குட நாட்டினை ஒத்த எனது அழகு தொலையினும் தொலைவதாக
நம்மைப் பிரிந்து நெடுந்தொலைவில் உள்ள நாட்டில் பொருளீட்டும் செயல்  கூடாமையின், உரிய காலத்தில் முற்றாமையின் காலம் தாழ்ந்திருப்போராகிய நம் காதலர், என்றும் நோயின்றி இனிது இருப்பாராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக