ஞாயிறு, 2 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1295


திருக்குறள் -சிறப்புரை :1295

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. ---- ௨ ௯

காதலர் பிரிந்திருந்த பொழுது, அவரைப் பெறாது வருந்தி அஞ்சுகின்றது ; அவரைப் பெற்றபின் பிரிந்து சென்றுவிடுவாரோ என்று நினைத்து அஞ்சுகின்றது. அதனால் எனது நெஞ்சம் நீங்காத துன்பத்தின் கொள்கலனாகவே இருக்கின்றது.

என் எனப்படுங்கொல் தோழி மின்னுவர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன் எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே.” –குறுந்தொகை.

தோழி..! மேகம் எழுந்து மின்னி ஒலிக்கும். அது ஒன்றுதானா..? அம்மேகம் ஒலிப்பதற்கு மேலும் காட்டில் உள்ள மயில்கள், கடியவாய் இசைக்கும். தலைவர் உடம் இருக்கும்போது நட்பாய், இப்பொழுது பகையாய் வருத்தும் இவ்விரண்டன் பொருட்டு, என் அறிவில்லாத நெஞ்சம் பெரிய கலக்கத்தை அடையும். இவ்வாறு கலக்குறுவதன் காரணம் யாதென்று அறியேன்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக