செவ்வாய், 11 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1314


திருக்குறள் -சிறப்புரை :1314

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. ----- ௩க ௪

யாவரினும் நாம் மிக்க காதலை உடையோம் என்று  அவளின் நலம் பாராட்டி உரைத்தாலும், அதற்கு வேறுபொருள் கொண்டு நீ காதலித்த யாரைக்காட்டிலும் என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

ஏடா..! நினக்குத் தவறு உண்டோ நீ வீடு பெற்றாய்
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி
நிலைப்பால் அறியினும் நின் நொந்து நின்னைப்
புலப்பார் உடையர் தவறு.” –கலித்தொகை.

 ஏடா..! நின் கண்ணை மறைத்த இமைக்குள்ளே நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறாய் ; ஆதலால் நீ,கைவிடுதலைப் பெற்றாய் ; உன் நிலைமையை அறிந்திருந்தாலும் அறியாதாரைப்போல நின்னை நொந்து புலக்கின்றவர் தவறுடையவர் ; நினக்குத் தவறும் உண்டோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக