திருக்குறள்
-சிறப்புரை
:1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா. ---- க ௩க0
ஊடலைத் தணிக்க முயலாது மேலும் வருத்தமுறச் செய்த
தலைவரோடு கூடிக்களிப்போம் என்று என் நெஞ்சம் ஆசைப்படுகின்றது.
“நலத்தகை எழில் உண்கண் நல்லார் தம்
கோதையால்
அலைத்த புண் வடு காட்டி அன்பின்றி வரின் –எல்லா
புலப்பென் யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
கலப்பென் என்னும் இக் கையறு நெஞ்சே.” ----கலித்தொகை.
ஏடி..!
நலம் செறிந்த அழகிய மையுண்ட கண்ணினை உடைய பரத்தையர், தம் கோதையால் அடித்த நலத்தகையையும் நகத்தாலும் எயிற்றாலும் ஏற்படுத்திய புண்களையும்
பூண்கள் பொறித்த வடுக்களையும் காட்டி என்னிடத்து அன்பின்றி வருவானாயின், நான் அவனுடன் ஊடல் கொள்வேன் என்றிருப்பேன் ; அந்நிலையே
செயலற்ற நெஞ்சு அவனைக்காணின் பிறவெல்லாம் போற்றாது, அந்நிலை தன்னிலே, அவனோடு யான் கூடுவேன் என்று கூறும் ; யான் என் செய்வேனடீ…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக