செவ்வாய், 4 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1299


திருக்குறள் -சிறப்புரை :1299

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி. ---- ௨ ௯ ௯

ஒருவர்க்குத் துன்பம் வந்து சேர்ந்த காலத்தில் அத்துன்பத்தைப் போக்குவதற்குத் தம்முடைய நெஞ்சமே தமக்குத்  துணை இல்லாதபோது வேறு யாரே துணையாக அமைவர்..?

அளிய பெரிய கேண்மை நும்போல்
சால்பெதிர் கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடின்று விரும்பாராயின்
வாழ்தல் மற்றெவனோ தேய்கமா தெளிவே.” -----நற்றிணை.

துறைவனே..! எக்காலத்தும் கருணை செய்தலை உடைய சிறந்த கேண்மை உடைய நும்மைப்போலச் சால்பினை எதிரேற்றுக்கொண்ட செம்மை உடையாரும், தம்மை அடைந்தாரைப் பாதுகாப்பேம் என்று அரிய சூள் உரைத்து, அதனை நம்பியோர் தெளியாத நெஞ்சுடனே செயல் அழிந்து வாடும்படி நெடுநாள் விரும்பாது இருப்பாராயின் அங்ஙனம் தஞ்சம் என்று அடைந்தார் தாம் உயிர் வாழ்தல் எவ்வாறோ..? நீ இங்கு நயந்து கூறுவன  முழுதும் அழிந்தொழிவதாக ; இவள் படுகின்ற துன்பமெல்லாம் அவளே நுகர்ந்து அழிவாளாக..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக