புதன், 26 ஜூன், 2019

தொல்தமிழர் அறிவியல் - 3

Ø தொல்தமிழர் அறிவியல் - 3
                    “ தமிழ் வளமையான மொழி; தொன்மை வாய்ந்த மொழி ; நான் மனதாரச் சொல்கிறேன். இந்தியாவின் வளமையைப் பறைசாற்றுவதற்குத் தமிழ் மொழியைக் குறிப்பிடலாம்” – இந்தியத் தலைமை அமைச்சர் திரு நரேந்திர மோடி அவர்கள்.

                      ” ஆரிய நாகரிகத்தினும் தமிழ் நாகரிகம் பன்னூறு மடங்கு பழைமை யுடையது என்பதைச் சேர சோழ பாண்டியராகிய மூவேந்தரது தொடக்கற்ற பழம்பெருமையே காட்டும். திருக்குறளில்பழங்குடிஎன்னும் தொடரை விளக்குகையில் பரிமேலழகர் சேர சோழ பாண்டியரென்றாற் போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்ட குடிஎன்று கூறுவது காண்க.” –     பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை
                                                      
                    தொல்தமிழர்தம் அறிவாற்றலில் விளைந்த அற்புதக்கலை ஓகம். இக்கலை மிகவும் தொன்மையானது. சிவனை முதன்மையாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை உடற்கூறுகளை உய்த்துணர்ந்து இன்றைய அறிவியல் வியக்கும் வண்ணம் வாழ்வியலை வளப்படுத்துகிறது. சிந்துவெளித் தமிழரிடம் சிறந்தோங்கி இருந்ததற்கான அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இக்கலை ஆரியர்கள் வருகைக்கு முன்பே தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருந்தது.
ஓகக் கலை
                        இன்றைய அறிவியல் வியக்கும் வண்ணம் வாழ்வியலை வளப்படுத்தும் ஓகக் கலை, சிந்துவெளித் தமிழரிடம் சிறந்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஓகம் ஆரியர் வருகைக்கு முன்பே தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருந்தது.

 Yoga: The Health Mantra…. By -  Govind Rawat
                   “ The history of Yoga may go back anywhere from five to eight thousand years, depending on the perspective of the historians. It evolved wholly in the land of  India and while it is supposed by some scholars  that yogic practices  were originally the domains of the indigenous , non – Aryan ( and pre – vedic ) peoples, it was first  clearly expounded in the great vedic shastras ( Religious) .”    
               “ Pre – vedic findings  are taken, by some commentators, to show that ‘ yoga’ existed in some form  well before the establishment  of Aryan culture in the north Indian subcontinent .
A triangular amulet seal uncovered  at thae Mohenjo- daro archaeological     excavation site depicts a male, seated on a low platform in a cross-legged position, with arms outstretched .” p.30. 
“At Kochi biennale Sangam poems throw light on nature
                            Four years ago when Ravi Agarwal decided to expain the unending possibilities of nature through his work this artist-photographer searched for some ancient literary texts related to nature and landscape. A few months of searching led him to a copy of “poems of love and war” a collection of eight anthologies and the ten long poems of Sangam era. After reading the book Agarwal did’t look back. There were no other ancient poems according to him which could capture the relationship with nature so vibrantly as the Sangam poems.”
                                                                          --Times of India– 15/2/17
குறுந்தொகை:  பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் உரை வளம்.
சங்க  இலக்கியத்துட் யாங்கணும் இயற்கைக்குப் பொருந்தா புனைவு முறைகளைக் காண்டலரிது; ஓரோரிடத்து வருமாயின் அஃது வடவர் கேண்மையானே வந்த இழுக்கிற்றென்க.” என்று தொல் தமிழ்ப் புலவர்களின் அறிவாற்றலைப் போற்றியுரைப்பார் பெருமழைப் புலவர். …. தொடரும்.......

2 கருத்துகள்:

  1. Well-researched article. Kudos to the writer.
    Peter Johnson, Malaysia.

    பதிலளிநீக்கு
  2. களப்பாள - , மன்னார்குடி, திருவாரூர்- தமிழ்ப் டேராசிரியர் பெருந்தகைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு