திருக்குறள்
-சிறப்புரை
:1321
133. ஊடலுவகை
இல்லை தவறவர்க்கு ஆயினும்
ஊடுதல்
வல்லது அவரளிக்கு மாறு. ------ க ௩உக
காதலரிடத்துத் தவறு ஒன்றும் இல்லையானாலும் அவரொடு
ஊடல் கொள்வது, அவர், மேலும் நம்மை நயந்து அன்பு செய்யுமாறு
தூண்டுவதற்கே.
“அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பும் நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி
இன்றே இவணமாகி நாளை…..
…… ……… ………… ………..
மழைத்துளி மறந்த அங்குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொல்லோ நெஞ்சே பூப்புனை
புயலென ஒலிவரும் தாழிரும் கூந்தல்
செறிகொடி முன்கை நம் காதலி
அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே.” –அகநானூறு.
அன்பும்,
மடனும், மென்மையும், ஒழுக்கமும்,
எலும்பை நெகிவிக்கும் சொல்லும் ஏனையவும் தலைவியுடன் ஒன்றுபட்டுள்ள நல்ல
கொள்கைஉடையோமாய், இருவரும் ஒரு தன்மைத்தாய்த் தழுவி இன்று இவ்விடத்தே
இருந்தோமாகி,
நாளை….!
பூவால் புனையப்பெற்ற மேகம் போலத் தழைத்த, நீண்ட, கரிய கூந்தலையும்
நெருங்கிய வளைகளை உடைய முன்கையினையும் உடைய, நம் காதலியின் அறிவு
கலங்கிய பார்வையையும் புலவியையும் நினைந்து சீறூரில் (தனித்து)
தங்கியிருப்போமோ.? என்றனன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக